JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

காஷ்மீர் : ஜனாதிபதி ஆட்சி நீட்டிப்பு

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், ஜனாதிபதியின் ஆட்சியை மேலும், ஆறு மாதங்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு பார்லிமென்ட் ஒப்புதல் அளித்தது. லோக்சபா ஏற்கனவே ஒப்புதல் அளித்த நிலையில், ராஜ்யசபாவிலும் இந்த தீர்மானம், நீண்ட விவாதத்திற்குப் பிறகு, நேற்று நிறைவேறியது.

  ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சி - பா.ஜ., கூட்டணியில் பிரச்னை ஏற்பட்டதைத் தொடர்ந்து, கடந்தாண்டு நவ., 21ல், ஆட்சி கலைக்கப்பட்டது. தீர்மானம்: அதைத் தொடர்ந்து, ஜனாதிபதி ஆட்சி நடைமுறைக்கு வந்தது. இந்தக் காலக்கெடு இன்றுடன் முடிகிறது. அதையடுத்து, இன்று முதல், மேலும் ஆறு மாதங்களுக்கு ஜனாதிபதியின் ஆட்சியைத் தொடர்வதற்காக தீர்மானத்தை, மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இந்தத் தீர்மானம், லோக்சபாவில், நேற்று முன்தினம் நிறைவேறியது. இந்த நிலையில், ஜனாதிபதி ஆட்சியை நீட்டிக்கும் தீர்மானத்தை, உள்துறை அமைச்சர், அமித் ஷா, ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

அப்போது அவர் கூறியதாவது: ஜம்மு - காஷ்மீர் மாநில சட்டசபைக்கான தேர்தலை இந்தாண்டு இறுதியில் நடத்துவது என, தேர்தல் கமிஷன் முடிவு எடுத்துள்ளது. அதனால், வேறு வழியில்லாமல் இந்த தீர்மானம் கொண்டு வரப்பட்டுள்ளது. நிலைமையை புரிந்து கொண்டு,எதிர்க்கட்சிகள் அரசுக்கு ஆதரவு அளிக்க வேண்டும். இந்தாண்டு, மே 7 முதல், ஜூன், 4 வரை, ரம்ஜான் மாதம். வழக்கமாக, ரம்ஜான் மாதத்தில், ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில் தேர்தல் நடத்தப்படாது.

மேலும், ஜூன், 30 முதல், ஆக., 15வரை, அமர்நாத் யாத்திரை நடக்கிறது. இந்த காலகட்டத்தில், பகர்வால் சமூக மக்கள், மலைப் பகுதிக்கு சென்று, அக்டோபரில் தான் திரும்புவர். அதனால், இந்த ஆண்டு இறுதியில், சட்டசபை தேர்தலை நடத்த, தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது. இவ்வாறு, அவர் கூறினார். இந்த தீர்மானத்துடன், ஜம்மு - காஷ்மீர் இடஒதுக்கீட்டு திருத்த மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. எல்லைக் கட்டுப்பாடு பகுதியில் உள்ளவர்களுக்கு, கல்வி மற்றும் வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது.

Read 91 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…