JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

குஜராத் ராஜ்யசபா தேர்தல்: காங். எம்.எல்.ஏ.க்கள் கடத்தல்

 குஜராத்தில் நடக்க உள்ள ராஜ்யசபா தேர்தலில் குதிரை பேரம் நடப்பதாக எழுந்த புகாரில் காங். எம்.எல்.ஏ.க்கள் 69 பேர் நேற்று இரவு ரிசார்ட் ஒன்றில் தங்கவைக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.வைச் சேர்ந்த அமித் ஷா, ஸ்மிருதி இரானி ஆகிய இருவரும் வென்றனர்.இதையடுத்து குஜராத் மாநிலத்தில் இருந்து ராஜ்யசபாவுக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட, தங்களது எம்.பி., பதவிகளை, இருவரும் ராஜினாமா செய்தனர்.' காலியாக உள்ள அந்த இரண்டு ராஜ்ய சபா இடங்களுக்கு, தனித்தனியாக ஜூலை, 5ல் இடைத் தேர்தல் நடத்தப்படும்' என, தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. இதை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் காங். தொடர்ந்த வழக்கு தள்ளுபடியானது.

குஜராத் சட்டசபையில், மொத்தம், 182 இடங்களில், பா.ஜ.,வுக்கு, 100; காங்.,குக்கு, 75, எம்.எல்.ஏ.,க்கள் உள்ளனர். ஏழு இடங்கள் காலியாக உள்ளன. தற்போது காலியாக உள்ள இரு ராஜய்சபா இடங்களுக்கும் மத்திய வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கர், ஜூகால்ஜி தாக்கூர் ஆகிய இருவரும் பா.ஜ. வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளனர்.இந்நிலையில் தேர்தலில் தங்களது காங். எம்.எல்.ஏ.க்கள் விலைபோகிவிடுவர், குதிரை பேரம் நடக்க வாய்ப்புள்ளது என கருதி நேற்று இரவோடு இரவாக 69 எம்.எல்.ஏ.க்களும் அழைத்துச்செல்லப்பட்டு பானஸ்கந்தா மாவட்டத்தில் உள்ள பல்ராம் பேலஸ் ரிசார்ட் ஒன்றில் தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2017-ல் நடந்த களேபரம்

மாநில காங். தலைவர் அஸ்வின் கோட்வால் கூறியது, கடந்த 2017 ராஜ்யசபா தேர்தலில் மூன்று இடங்களில் ஒன்றில் காங். வேட்பாளராக நிறுத்தப்பட்ட அகமதுபடேலை வீழ்த்த பா.ஜ.வினர் நடத்திய, குதிரே பேரமும், களேபரமும் எல்லோருக்கும் தெரிந்ததே . எனவே முன்னெச்சரிக்கையாக தான் காங். எம்.எல்.ஏ.க்கள் ரகசிய இடத்தில் வைக்கப்பட்டுள்ளனர் என்றார்

Read 95 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…