JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

மத்திய பட்ஜெட் : ரயில்வேயில் ரூ.50 லட்சம் கோடி முதலீடு

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதாவது: ரயில்வே வளர்ச்சிக்கு தனியார் துறையுடன் இணைந்து செயல்பட மத்திய அரசு திட்டமிடப்பட்டு உள்ளது. ரயில்வே உள்கட்டமைப்பிற்கு ரூ.50 லட்சம் கோடி முதலீடு தேவை என்பதால், தனியார் பங்களிப்பு அவசியம். அனைத்து தடங்களும் மின்மயமாக்கப்பட்ட ரயில் இயக்க நடவடிக்கை எடுக்கப்படும். ரயில் நிலையங்களை மேம்படுத்த சிறப்பு திட்டம் துவக்கப்படும்.

நாட்டில் 657 கி.மீ., நீளத்திற்கு மெட்ரோ ரயில் இயக்கப்படுகின்றன. மேலும், 350 கி.மீ.,தூரத்திற்கு மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அனுமதி கொடுக்கப்படும்.

மின்சார வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு மானியம் வழங்கப்படும். சரக்கு போக்குவரத்தை போல் நீர்வழி போக்குவரத்து மேம்படுத்தப்படும். கங்கை நதியில் சரக்கு போக்குவரத்தை நான்கு மடங்காக்க நடவடிக்கை எடுக்கப்படும். விமான போக்குவரத்து துறையில் இந்தியா தன்னிறைவு பெறும் வகையில் திட்டங்கள் கொண்டு வரப்படும் என்றார்.

 

 

 

 

Read 106 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…