JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

வருமான வரிக் கணக்கு தாக்கல்: பான் கார்டுக்கு பதில் ஆதார் பயன்படுத்தலாம்

வருமான வரிக் கணக்கு தாக்கல் செய்ய நினைப்பவர்கள், தங்களிடம் பான் கார்டு இல்லையென்றால் அதற்கு பதிலாக ஆதார் எண்ணை பயன்படுத்தலாம் என்று பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்தார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், இனி பான் கார்டு இல்லாதவர்களும் வருமான வரிக் கணக்கை தாக்கல் செய்ய முடியும். வருமான வரி கணக்குத் தாக்கலுக்கான படிவத்தில் பான் எண்ணுக்கு பதிலாக ஆதார் எண்ணை குறிப்பிட்டால் போதுமானது. நாட்டின் பெரும்பான்மையான மக்களுக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுவிட்டது. எனவே, ஆதார் எண்ணை பயன்படுத்தி வருமான வரி கணக்குத் தாக்கல் செய்யும் வசதி அளிக்கப்பட்டுள்ளது மேலும் பல கோடி மக்களுக்கு பயனளிக்கும். 

அதேபோல வெளிநாடு வாழ் இந்தியர்கள் இனி ஆதார் அட்டை பெறுவதற்கு 180 நாள்கள் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. இந்திய கடவுச் சீட்டு (பாஸ்போர்ட்) வைத்துள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள், இந்தியாவுக்கு வரும்போது அவர்களுக்கு விரைவில் ஆதார் அட்டை வழங்கப்படும் என்றார்.
கடந்த மே மாதம் வரை மொத்தம் 123.82 கோடி பேருக்கு ஆதார் வழங்கப்பட்டுள்ளது.

Read 87 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…