JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

என்.எஸ்.ஜி விவகாரம் : சீனா தொடர்ந்து அடம் - சிக்கலில் இந்தியா

தென்கொரிய தலைநகர் சியோலில் வியாழக்கிழமை தொடங்கிய அணுசக்தி விநியோக கூட்டமைப்பு (என்எஸ்ஜி) நாடுகளின் 2 நாள் ஆண்டுக் கூட்டத்தில், என்எஸ்ஜி-யில் இந்தியாவைச் சேர்ப்பதற்கு சீனா, பிரேஸில் உள்ளிட்ட நாடுகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன.

இதையடுத்து இந்த விவகாரத்தில் இறுதி முடிவு எட்டப்படாமல் கூட்டம் வெள்ளிக்கிழமைக்கு ஒத்தி வைக்கப்பட்டது. இந்த விவகாரம் தொடர்பாக சீன அதிபர் ஜீ ஜின்பிங்கை, பிரதமர் மோடி உஸ்பெகிஸ்தான் தலைநகர் தாஷ்கண்ட்டில் வியாழக்கிழமை நேரில் சந்தித்து ஆதரவு கோரினார்.

இருப்பினும், என்எஸ்ஜி நாடுகளின் கூட்டத்தில் இந்தியாவுக்கு எதிரான தமது நிலைப்பாட்டை சீனா மாற்றி கொள்ளாததால், என்எஸ்ஜி-யில் இந்தியாவை சேர்த்துவிட வேண்டுமென்ற மோடியின் முயற்சிக்கு உடனடி பலன் கிடைக்கவில்லை.

மொத்தம் 48 நாடுகளை உள்ளடக்கிய என்எஸ்ஜி கூட்டமைப்பில் சேருவதற்கு இந்தியா தீவிரமாக முயன்று வருகிறது. இந்தியாவின் இந்த முயற்சிக்கு அமெரிக்கா, பிரிட்டன், மெக்ஸிகோ உள்ளிட்ட நாடுகள் பகிரங்கமாக ஆதரவு தெரிவித்துள்ளன.

ஆனால், அணு ஆயுதப் பரவல் தடை ஒப்பந்தத்தில் கையெழுத்திடாததால் இந்தியாவை என்எஸ்ஜி-யில் சேர்ப்பதற்கு சீனா, பிரேஸில், ஆஸ்திரியா அயர்லாந்து, துருக்கி, தென் ஆப்பிரிக்கா, நியூசிலாந்து உள்ளிட்ட நாடுகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன.

Read 218 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…