JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

ஜம்மு - காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து ரத்து

ஜம்மு - காஷ்மீருக்கு தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகள் அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35 - ஏ பிரிவுகளை மத்திய அரசு நேற்று ரத்து செய்ததன் மூலம் முடிவுக்கு வந்தன. இதன் மூலம் ஒரே நாடு; ஒரே அரசியல் சட்டம் என்பது அமலாகியுள்ளது. பிரதமர் மோடி தலைமையிலான அரசின் சரித்திர சாதனையாக இது கருதப்படுகிறது. இதனால் பிரிவினைவாத செயல்களுக்கு அந்த மாநிலத்தில் இடமில்லாமல் போக வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

அதுபோல மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரு யூனியன் பிரதேசங்களாக பிரிப்பதற்கான மசோதா பெரும்பான்மை ஆதரவுடன் ராஜ்யசபாவில் நேற்று நிறைவேறியது. மத்தியில் இத்தனை ஆண்டுகளாக ஆட்சியில் இருந்த காங்கிரஸ் உட்பட எந்த அரசுகளும் செய்யாத சரித்திர சாதனையை பிரதமர் மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு நேற்று நிகழ்த்தி காட்டியிருக்கிறது.

ஜம்மு - காஷ்மீர் மாநிலத்திற்கு 70 ஆண்டுகளுக்கு முன் ஜனாதிபதியால் தற்காலிகமாக வழங்கப்பட்டிருந்த சிறப்பு அந்தஸ்துகளுக்கான அரசியல் அமைப்புச் சட்டத்தின் 370 மற்றும் 35-ஏ பிரிவுகளை நீக்கிய ஜனாதிபதியின் உத்தரவை உள்துறை அமைச்சர் அமித் ஷா ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தார்.

அதுபோல ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தை ஜம்மு - காஷ்மீர் மற்றும் லடாக் என இரண்டு யூனியன் பிரதேசங்களாக பிரிக்கும் சட்ட மசோதாக்களையும் உடனடியாக சபையில் தாக்கல் செய்து எதிர்க்கட்சிகளுக்கு அமித் ஷா அதிர்ச்சி வைத்தியம் அளித்தார். ஜம்மு - காஷ்மீருக்கு சட்டசபையுடன் கூடிய யூனியன் பிரதேச அந்தஸ்தும் லடாக்கிற்கு சட்டசபை இல்லாத யூனியன் பிரதேச அந்தஸ்தும் வழங்கப்படும் என அறிவித்தார். அதை ஜம்மு - காஷ்மீரை சேர்ந்த காங்கிரஸ் எம்.பி.க்களும் அவர்களுக்கு ஆதரவான சில எதிர்க்கட்சி எம்.பி.க்களும் தொடர்ந்து நடந்த விவாதங்களில் காரசாரமாக எதிர்த்தனர்.

Read 59 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…