JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

எய்ம்ஸ்-மருத்துவமனையில் அருண் ஜெட்லி அனுமதி

முன்னாள் மத்திய நிதி அமைச்சரும், பா.ஜ., மூத்த தலைவருமான அருண் ஜெட்லி, உடல்நலக்குறைவு காரணமாக டில்லி, எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

கடந்த 2014-19 பா.ஜ., ஆட்சியில் மத்திய நிதி அமைச்சராக இருந்தவர் அருண் ஜெட்லி. நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில், பா.ஜ., அமோக வெற்றி பெற்று மீண்டும் ஆட்சியை கைப்பற்றிய போது, உடல்நிலை காரணமாக, மீண்டும் அமைச்சர் பதவி வேண்டாம் என ஜெட்லி ஒதுங்கினார். இந்நிலையில், உடல்நலக்குறைவு காரணமாக அருண் ஜெட்லி, டில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளதாகவும், இதயம் மற்றும் கிட்னி, சிறப்பு மருத்துவர்கள் அவருக்கு சிகிச்சை அளிப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனையடுத்து உள்துறை அமைச்சர் அமித் ஷா, நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன், பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்சவர்தன், லோக்சபா சபாநாயகர் ஓம் பிர்லா ஆகியோர் எய்ம்ஸ்-க்கு வந்துள்ளனர். அருண் ஜெட்லியின் உடல்நலம் குறித்து விசாரிக்க பிரதமர் மோடி மருத்துவமனைக்கு வருகை தந்தார்.

மருத்துவமனை வெளியிட்ட அறிக்கையில், உடல்நலக்குறைவு காரணமாக இன்று (ஆக.,9) காலை 11 மணி அளவில் அருண் ஜெட்லி அனுமதிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது . அவர் அவசர சிகிச்சை பிரிவில் மருத்துவர்களின் தீவிர கண்காணிப்பில் உள்ளதாகவும், தற்போது அவரது உடல் நலம் சீராக உள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read 51 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…