JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

பெங்களூரு நகரை தகர்க்க சதி?

நாட்டின் முக்கிய நகரங்கள் மீது, அணு குண்டு வீசி தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளதாக, மத்திய, மாநில உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், 'ஹை அலர்ட்' அறிவித்து, பெங்களூரு நகரில் பாதுகாப்பை பலப்படுத்தி, போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ் உத்தரவிட்டுள்ளார்.ஜம்மு - காஷ்மீருக்கு வழங்கப்பட்ட சிறப்பு அந்தஸ்தை ரத்து செய்து, அது, யூனியன் பிரதேசமாக அறிவிக்கப்பட்டதில், பாகிஸ்தான் அதிர்ச்சியடைந்தது. இந்தியாவின் முடிவுக்கு எதிராக, ஐ.நா., சபையில் முறையிட முயன்ற, அந்நாட்டின் முயற்சியும் தோல்வியடைந்தது. இதனால், போர் நடக்கும் பட்சத்தில், உலக நாடுகள் தான் காரணமாக இருக்கும் என, பாக்., பிரதமர் இம்ரான் கான், தெரிவித்திருந்தார்.இந்நிலையில், பெங்களூரு உட்பட ,நாட்டின் முக்கிய நகரங்கள் மீது, அணு குண்டு தாக்குதல் நடத்த வாய்ப்புள்ளது என மத்திய, மாநில உளவுத்துறையினர் எச்சரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால், நகரின் முக்கிய பகுதிகளில் பாதுகாப்பை பலப்படுத்தும்படி, பெங்களூரு நகர போலீஸ் கமிஷனர் பாஸ்கர் ராவ், அவசர சுற்றறிக்கை அனுப்பி, 'ஹை அலர்ட்' அறிவித்துள்ளார்.

Read 45 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…