JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் கய்யாம் மரணம்

பழம் பெரும் ஹிந்தி இசை அமைப்பாளர் முகம்மது ஜஹூ கய்யாம்,92 உடல் நலக்குறைவால் காலமானார். 1960 களில் ''ஷோலா அவுர் சொப்னம்'' என்ற ஹிந்தி படம் மூலம் புகழ்பெற்றவர் கய்யாம், 92 .அமிதாப் பச்சன் நடித்த கபி கபி, ரசியா சுல்தான், திரிசூல், உள்ளிட்ட ஏராளமான ஹிந்தி படங்களுக்கு இசையமைத்து, கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிந்தி படஇசை உலகில் புகழ்பெற்றார். 

'நூரி' என்ற திரைபடத்தில் இடம் பெற்ற 'ஆஜாரே' , 'கபி கபி மேரா தில்' போன்ற மெல்லிசை பாடல்கள் இவரது இசை அமைப்பில் உருவானவை.. உமரோவ் ஜான் படத்திற்காக தேசிய விருதினையும் ,2011 பத்ம பூஷண் விருதினையும் பெற்றுள்ள கய்யாமுக்கு கடந்த 10 நாட்களுக்கு முன் நுரையீரலில் தொற்று காரணமாக மும்பை ஜிஹூவில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிப்பட்டிருந்தார். நேற்று திடீரென மாரடைப்பு ஏற்பட்டதையடுத்து சிகிச்சை பலனின்றி காலமானார். கய்யாம் மறைவுக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

Read 77 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…