JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றங்கள்

மத்திய அமைச்சரவையில் விரைவில் மாற்றம் செய்ய பிரதமர் மோடி திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

மத்திய அமைச்சர்கள் சிலர் மீது பிரதமர் அதிருப்தியில் இருப்பதாக கூறப்படுகிறது. அமைச்சர்களின் செயல்பாடுகளை கண்காணித்து வரும் மோடி, சிலரை கட்சி பணிக்கு அனுப்ப முடிவு செய்துள்ளார். கோவா முதல்வராவதற்காக மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் பதவியை மனோகர் பரிக்கர் ராஜினாமா செய்துள்ளார். இதுனால் நிதியமைச்சர் ஜெட்லி பாதுகாப்பு துறையை கூடுதலாக கவனித்து வருகிறார். பாதுகாப்பு துறைக்கென தனி அமைச்சரை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதும் அமைச்சரவை மாற்றத்திற்கான முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

புதிதாக அமைய உள்ள அமைச்சரவையில் உ.பி.,யைச் சேர்ந்த மனோஜ் சின்ஹாவுக்கு கேபினேட் அந்தஸ்து பதவி வழங்க மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. உ.பி., சட்டசபை தேர்தலில் பா.ஜ., அமோக வெற்றி பெற்றதால் அம்மாநிலத்தை சேர்ந்த 2 பேருக்கு மத்திய அமைச்சர் பதவி வழங்க மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சுஷ்மா சுவராஜின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவருக்கு ஓய்வும், வெளியுறவுத்துறை அமைச்சர் பதவியை ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜேவுக்கும் வழங்க மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

வயதானவர், சரியாக செயல்பாடதவர்களை மத்திய அமைச்சரவையில் இருந்து நீக்கி விட்டு, புதியவர்களுக்கு வாய்ப்பு அளிக்கவும் மோடி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. சில அமைச்சர்களும், சிலரின் இலாக்காக்களும் மாற்றப்பட வாய்ப்பு உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. நடப்பு பட்ஜெட் கூட்டத்தொடர் இம்மாதத்தில் முடிவடைவதால், அதற்கு பின் அமைச்சரவையில் மாற்றம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது.

 

 

Read 130 times Last modified on புதன்கிழமை, 05 ஏப்ரல் 2017 11:21
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…