JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

ரசகுல்லா உரிமை : வென்றது மேற்கு வங்கம்

'ரசகுல்லா' இனிப்பின் மீதான உரிமை போராட்டத்தில், மேற்கு வங்க மாநிலம் வெற்றி பெற்று, புவிசார் குறியீடு பெற்றுள்ளது.
கோல்கட்டா என்றாலே, மக்கள் நினைவில் வருவது, ரசகுல்லா இனிப்பு தான். இந்த இனிப்பை, தாங்கள் கண்டுபிடித்ததாக,ஒடிசா மக்கள் உரிமை கொண்டாடுகின்றனர்.

மேற்கு வங்கத்தின், பிரபல இனிப்பு தயாரிப்பாளரான, நவீன் சந்திர தாஸ், 1868 முதல், தங்கள் நிறுவனம், ரசகுல்லா தயாரித்து வருவதாக கூறியதை அடுத்து, புவிசார் குறியீடு பெறுவது குறித்து, ஒடிசா அரசு முயற்சித்து வந்தது.

இந்த உரிமை போராட்டம் நீடித்து வரும் நிலையில், 'எந்த நிலையிலும், ரசகுல்லா மீதான உரிமையை, ஒடிசாவுக்கு விட்டுக் கொடுக்க மாட்டோம்' என, மேற்கு வங்க அமைச்சர், அப்துர் ரஜாச் மோல்லா கூறியிருந்தார். மேலும், 'ரசகுல்லாவை, உலகளவில், மாநில இனிப்பாக பிரபலப்படுத்த வேண்டும்' என, முதல்வர் மம்தா பானர்ஜி கூறியிருந்தார்.

இந்நிலையில், ரசகுல்லா இனிப்பு மீதான உரிமை போட்டியில், மேற்கு வங்கம் வெற்றி பெற்று, புவிசார் குறியீடு பெற்றுள்ளது. இதன் மூலம், உலகளவில், மேற்கு வங்க இனிப்பாக, ரசகுல்லா இடம் பெறுகிறது.

ரசகுல்லாவை, மேற்கு வங்க இனிப்பு எனக் குறிப்பிட்டு, அதற்கு, புவிசார் குறியீடு கிடைத்தது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பெருமை அளிப்பதாகவும், முதல்வர் மம்தா பானர்ஜி, 'டுவிட்டரில்' பதிவிட்டு உள்ளார். 

Read 211 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…