JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

'ஜெனிரிக்' மருந்து கடைகளுக்கு பெருகும் ஆதரவு

மலிவு விலையில் கிடைக்கும், மத்திய அரசின், 'ஜெனிரிக்' மருந்துகளுக்கு வரவேற்பு அதிகரித்துள்ளது. 

மலிவு விலை மருந்து

நாட்டில் உள்ள ஒவ்வொரு குடிமகனுக்கும் தரமான, குறைந்த விலையில் மருந்துகளை வழங்க, மத்திய அரசு, மலிவு விலை மருந்து கடைகளை துவங்கி வருகிறது. இதில், ஜெனிரிக் வகை மருந்துகள் விற்கப்படுகின்றன. ஒரு குறிப்பிட்ட நோய்க்கான மருந்தில், வணிகப் பெயர் இல்லாமல், அதில் அடங்கிய மூலக்கூறுகள் மட்டுமே இருப்பது, ஜெனிரிக் மருந்துகள் என அழைக்கப்படும்.

உதாரணமாக, காய்ச்சலுக்கு சாப்பிடும், 'பாரசிட்டமால்' என்பது மூலக்கூறின் பெயர். இவை, குரோசின், கால்பால், டோலோ போன்ற நிறுவன பெயர்களில் விற்கப்படுகின்றன.

80% குறைவு

ஜெனிரிக் மருந்துகள், உற்பத்தி செலவை மட்டுமே உள்ளடக்கியது. வணிகப் பெயர், விளம்பரம் இல்லாததால், மிகக் குறைந்த லாபத்திற்கு விற்கப்படுகிறது. சந்தையில் கிடைக்கும் மருந்து விலைகளை விட, 60ல் இருந்து, 80 சதவீதம் வரை, விலை குறைவாக கிடைக்கும்.

இதனால், தொடர்ந்து மாத்திரை சாப்பிடும் சர்க்கரை, ரத்த அழுத்தம், கொழுப்பு பிரச்னை உள்ளவர்கள் மிகவும் பயன் பெறுகின்றனர். மாதந்தோறும் மருந்துகளுக்கு என, 500 ரூபாய் செலவு செய்தவர்களுக்கு, தற்போது, 100ல் இருந்து, 120 ரூபாய்க்குள் தான் செலவாகிறது. 

மருந்துகள் அனைத்தும் உலக சுகாதார மையம், மத்திய அரசின் உணவு மற்றும் மருந்து நிர்வாகத்தின் ஒப்புதல் பெற்றே தயாரிக்க முடியும். எனவே, எல்லா மருந்துகளும் தரமானவை. தற்போது, நாடு முழுவதும், 2,802ம், தமிழகத்தில், 208 கடைகளும் திறக்கப்பட்டுள்ளன. 'ஜெனிரிக்' மருந்து திட்டத்துக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உள்ளது.

Read 139 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…