JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கு: மதுகோடா குற்றவாளி என நீதிமன்றம் அறிவிப்பு

நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் மாநில முன்னாள் முதல்வர் மதுகோடா  உள்ளிட்டோர்  குற்றவாளிகள் என சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

ஜார்க்கண்ட் மாநிலத்தில் தனியார் நிறுவனங்களுக்கு முறைகேடாக நிலக்கரிச் சுரங்கங்கள் ஒதுக்கப்பட்டதாக சிபிஐ வழக்கு தொடர்ந்தது. இதில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோர் மீது குற்றம்சாட்டப்பட்டது.

நிலக்கரி சுரங்கம் ஒதுக்கீடு செய்யப்பட்டதில், வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவனம் (விஐஎஸ்யுஎல்) பலனடையும் வகையில், மதுகோடா உள்ளிட்டோர் தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தியதாகவும், சதியாலோசனை செய்ததாகவும் புகார் தெரிவிக்கப்பட்டது.

இந்த வழக்கை விசாரித்த சிபிஐ சிறப்பு நீதிமன்ற நீதிபதி பரத் பராஷர் இன்று (புதன்) தீர்ப்பு வழங்கினார். அவர் தனது தீர்ப்பில் கூறியதாவது:

"நிலக்கரி சுரங்க ஊழல் வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதல்வர் மதுகோடா, மத்திய நிலக்கரித்துறை முன்னாள் செயலாளர் எச்.சி.குப்தா உள்ளிட்டோருக்கு  உள்ள தொடர்பு சந்தேகமின்றி நிரூபிக்கப்பட்டுள்ளது. அவர்கள் மீதான ஊழல் புகாருக்கு ஆதாரம் உள்ளது. எனவே இந்த வழக்கில் அவர்கள் குற்றவாளிகள் ஆவர். அவர்களுக்குரிய தண்டனை விவரம் நாளை (வியாழன்) அறிவிக்கப்படும்" எனக் கூறினார்.

எனினும் இந்த வழக்கில் வினி அயர்ன் அண்ட் ஸ்டீல் உத்யோக் நிறுவன முன்னாள் இயக்குநர் வைபவ் துல்ஷியன் உள்ளிட்ட 4 பேரை விடுவித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Read 66 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…