JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

ரூபாய் 300 கோடி செலவில் புதிய சூரியக் கோயில் விரைவில் உதயம்

ஒடிசாவின் பூரி நகரில் பிரபல கோனார்க் சூரிய கோவில் உள்ளது.  இதேபோன்று மற்றொரு கோவிலை கட்டுவது என முடிவு செய்யப்பட்டது.  இதற்காக 100 ஏக்கர் நிலம் வாங்கப்பட்டு கடந்த மாதம் அடிக்கல் நாட்டப்பட்டது.

இக்கோவில் சந்தன்பூர் அருகே தேசிய நெடுஞ்சாலை 316ஐ ஒட்டி அமையவுள்ளது.  இதில் ஆதித்ய நாராயண் (சூரிய கடவுள் வடிவம்) வணங்கும் கடவுளாக வடிவமைக்கப்படும்.  கோனார்க் சூரிய கோவிலின் முக்கிய கட்டமைப்புகளுடன் 230 அடி உயரத்தில் இது உருவாகும்.

இதற்கான புளூ பிரின்ட் நன்றாக தயார் செய்யப்பட்டு உள்ளது.  ரூ.300 கோடி திட்ட மதிப்பில் இன்னும் ஒரு மாதத்தில் கட்டும் பணி தொடங்கப்பட உள்ளது.  18 மாதத்தில் நிலத்தில் இருந்து 14 அடி உயரத்திற்கு கோவில் அமைப்பு காணும் வகையில் உருவாகும்.  இதனை பத்ம விபூஷண் விருது பெற்ற ரகுநாத் மகபத்ரா வடிவமைக்கிறார்.  அவர் மாநில லலித் கலா அகாடமியின் தலைவராக இருக்கிறார்.

இவ்வளவு உயரத்துடன் கூடிய கோவிலை இவர் எப்படி உருவாக்குவார் என்ற எழுந்த யூகங்கள் பற்றி அவர் கூறும்பொழுது, லிங்கராஜ், ஸ்ரீ ஜெகன்னாதர் மற்றும் கோனார்க்கில் உள்ள சூரிய கோவில் ஆகியவற்றை வடிவமைத்த முன்னோர்கள் கொண்ட பரம்பரை குடும்பத்தினை சேர்ந்தவன் என கூறியுள்ளார்.

Read 32 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…