JoomlaLock.com All4Share.net

Background Video

இந்தியா

'நீட்' தேர்வுக்கு , நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள்

'இந்த ஆண்டு முதல், 'நீட்' தேர்வுக்கு, நாடு முழுவதும் ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கப்படும்; அது, 10 மொழி களில், மொழி மாற்றம் செய்யப்பட்டு வழங்கப்படும்' என, உச்ச நீதிமன்றத்தில், சி.பி.எஸ்.இ., தெரிவித்துள்ளது. 

இளங்கலை மருத்துவப் படிப்பு மாணவர் சேர்க்கைக்கு, நீட் எனப்படும், தேசிய தகுதி நுழைவுத் தேர்வை, சி.பி.எஸ்.இ., நடத்துகிறது. கடந்த ஆண்டு நடந்த தேர்வில், பல்வேறு மாநிலங்களில், வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டன. இந்நிலையில், நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும், ஒரே மாதிரியான வினாத்தாள் வழங்கக் கோரி, உச்ச நீதிமன்றத்தில், 'சங்கல்ப் அறக்கட்டளை' என்ற அமைப்பின் சார்பில், மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்த மனு மீதான விசாரணை,நீதிபதிகள், அருண் மிஸ்ரா, எப்.ஏ.நாசீர் அடங்கிய அமர்வு முன் நடந்தது.சி.பி.எஸ்.இ., எனப்படும், மத்திய இடைநிலை கல்வி வாரியம் சார்பில், தாக்கல் செய்யப்பட்ட மனுவில் கூறியிருந்ததாவது; நீட் தேர்வுக்கான வினாத்தாள் தயாரிப்பது, தேர்வு நடத்துவது, தேர்வு முடிவு தரவரிசைப் பட்டியலை வெளியிடுவது மட்டுமே, சி.பி.எஸ்.இ.,யின் பணி.

கடந்த, 2017ல், 10 வகை வினாத்தாள்களை தயாரித் தோம். தேர்வுக்கு முன், வினாத்தாள் எதுவும் வெளி யானால், நாடுமுழுவதும், மறு தேர்வு நடத்துவது சிரமம். அதை தவிர்க்கவே, மாறுபட்ட வினாத் தாள்கள் தயாரிக்கப்பட்டன. ஒரே மாதிரியான வினாத்தாள் இடம்பெறவேண்டும் என கட்டாயமல்ல. இவ்வாறு மனுவில் கூறப்பட்டு இருந்தது.

ஆனால், இதை ஏற்க, நீதிபதிகள் மறுத்தனர். நீதிபதிகள் கூறுகையில், 'வெவ்வேறு வினாத்தாள்கள் வழங்கப்பட்டால், மாணவர்களின் திறமையை பரிசோதிக்க முடியாது. 'நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும் ஒரே மாதிரி யான, வினாத்தாள் வழங்கப்படுவது தான், சரியாக இருக்கும்' என்றனர்.இதை ஏற்று, சி.பி.எஸ்.இ., தாக்கல் செய்த மனுவில், 'இந்த ஆண்டு முதல், நீட் தேர்வுக்கு, நாடு முழுவதும் ஒரே மாதிரி வினாத்தாள் தயாரிக்கப்படும். ' என, கூறப்பட்டுள்ளது.

Read 37 times
Share this article

About author

Super User

Leave a comment

Make sure you enter the (*) required information where indicated. HTML code is not allowed.

Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…