JoomlaLock.com All4Share.net

Background Video

அஸ்ஸாமில் மழைவெள்ளத்தால் சுமார் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டும், நிலச்சரிவில் சிக்கியும் 3 பேர் உயிரிழந்துவிட்டனர்.

இதுதொடர்பாக அஸ்ஸாம் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையம் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
லகிம்பூர், விஸ்வநாத், பார்பேடா, நல்பாரி, சிராங், கோலாஹாட், திப்ரூகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் கனமழை நீடித்து வருகிறது. இந்த மாவட்டங்களில் உள்ள சுமார் 530 கிராமங்கள் வெள்ளத்தில் மிதக்கின்றன. 13,267 ஹெக்டேர் பயிர்கள் நீரில் மூழ்கியுள்ளன. சாலைகள், பாலங்கள் உள்ளிட்டவையும் சேதமடைந்துள்ளன.

11 மாவட்டங்களில் மொத்தம் 2 லட்சம் பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். கோலாஹாட் மாவட்டத்தில் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டு ஒருவர் உயிரிழந்தார். தேமாஜி, கம்ருப் பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவுகளில் சிக்கி இருவர் உயிரிழந்தனர். இந்த பகுதிகளில் மேலும் நிலச்சரிவுகள் ஏற்படும் அபாயம் உள்ளது. பிரம்மபுத்திரா உள்ளிட்ட பல்வேறு ஆறுகளில் அபாய அளவைத் தாண்டி வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது என்று அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…