JoomlaLock.com All4Share.net

Background Video

ரயில்களில், ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டில், வேறொருவர் பயணிக்கும் வசதி அறிவிக்கப்பட்டு உள்ளது; இதன்படி, ரயில் புறப்படுவதற்கு, 24 மணி நேரத்துக்கு முன், பெயரை மாற்றிக் கொள்ளலாம். இது தொடர்பாக, ஏற்கனவே உள்ள சில நிபந்தனைகள், தற்போது தளர்த்தப்பட்டுள்ளன.

தற்போது, ரயில் டிக்கெட் முன்பதிவு செய்து, குறிப்பிட்ட நாளில் பயணம் செய்ய முடியாத போது, டிக்கெட்டை ரத்து செய்ய வேண்டிஉள்ளது. டிக்கெட் ரத்து செய்யப்படும் நேரத்தை அடிப்படையாக வைத்து, கட்டணம் திரும்ப வழங்கப்படுகிறது.கடந்த, 1990ல், அறிமுகப்படுத்தப்பட்ட ரயில்வே விதிமுறைகளில், 1997 மற்றும், 2002ல், திருத்தங்கள் செய்யப்பட்டு, முன்பதிவு டிக்கெட்டை, குடும்ப உறுப்பினருக்கு மாற்றும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டது; ஆனால், இந்த வசதி பொதுமக்களை சென்றடையவில்லை.

புதிய வழிமுறை இந்நிலையில், ஒருவர் முன்பதிவு செய்த டிக்கெட்டில், அவருக்கு பதிலாக வேறு ஒருவர் பயணம் செய்வது தொடர்பான, சில புதிய வழிமுறைகளை, ரயில்வே தற்போது வெளியிட்டுள்ளது. இது குறித்து, ரயில்வே நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கை:டிக்கெட் முன்பதிவு செய்த தனிநபருக்கு பதில், அவரது தந்தை, தாய், சகோதரன், சகோதரி, மனைவி அல்லது கணவன், குழந்தைகள் என, குடும்ப உறுப்பினர்கள் பயணிக்கலாம்.

இந்த வசதியை பெற, ரயில் புறப்படுவதற்கு, 24 மணி நேரத்திற்கு முன், தன் டிக்கெட்டில் பயணிக்கப் போகும் நபர் குறித்த விபரங்களுடன், முக்கிய ரயில் நிலைய தலைமை முன்பதிவு மேற்பார்வையாளரிடம் விண்ணப்பிக்க வேண்டும். இதற்கு, போதிய சான்றிதழ்களை சமர்ப் பிக்க வேண்டும்.

அதே போல், திருமண கோஷ்டியாக செல்வோர், அவர்களை தலைமையேற்று அழைத்துச் செல்பவரின் அனுமதி கடிதத்துடன், புதிதாக செல்பவர்களின் பெயர், விபரங்களை தெரிவிக்க வேண்டும். அனுமதி கடிதம் அதற்கேற்ப டிக்கெட், வேறு ஒருவரது பெயரில் மாற்றித் தரப்படும்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…