JoomlaLock.com All4Share.net

Background Video

 உத்தர பிரதேசத்தின் துத்வா தேசிய பூங்கா, இந்திய-நேபாள எல்லைப் பகுதியில் அமைந்துள்ளது. இங்கு சுற்றுச்சூழல் சுற்றுலாவை மேம்படுத்தும் நோக்கிலும், வேலை வாய்ப்புகளை பெருக்கும் நோக்கத்திலும் வரும் பிப்ரவரி 9ம் தேதி துவங்கி மூன்று நாட்கள் சர்வதேச பறவைகள் திருவிழா நடத்தப்பட உள்ளது.

இது பற்றி வனத்துறை தலைமை பாதுகாவலர் உபாத்யாயா கூறுகையில், "துத்வாவில் சர்வதேச கவனத்தை ஈர்ப்பதற்காக, இந்த விழா நடத்தப்படுகிறது. இதில் பங்கேற்கும் 200 பறவை ஆராய்ச்சியாளர்கள், இங்குள்ள 450க்கும் மேற்பட்ட பறவை இனங்கள் குறித்து தகவல் சேகரிக்க உள்ளனர்.

இதன்மூலம், டுத்வாவிற்கு புதிய அடையாளம் கிடைக்கவும், உள்ளூர் வேலை வாய்ப்புகளை பெருக்கவும் வழி ஏற்படும்" என்றார். 

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…