JoomlaLock.com All4Share.net

Background Video

வங்கக் கடலில் நிலை கொண்டிருந்த தித்லி புயல் ஆந்திரா மற்றும் ஒடிசாவுக்கு இடையே கரையை கடந்தது. இதன் விளைவாக ஒடிசாவில் புயல் காற்றுடன் கூடிய, கனமழை பெய்து வருகிறது.

இதனால் ஒடிசாவின் கோபால்பூர் மற்றும் ஆந்திராவின் சிகாகுளம் அருகே மிகப் பெரிய நிலைச்சரிவு ஏற்பட்டுள்ளது. புயல் கரையை கடந்த 2 முதல் 3 மணி நேரத்தில் இந்த நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டு, நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்.

கடலோர மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை பெய்து வருகிறது. மரங்கள், மின்கம்பங்கள் வேருடன் சாய்ந்துள்ளன. இதனால் பல பகுதிகளில் சாலை போக்குவரத்து துண்டிக்கப்பட்டுள்ளது. மணிக்கு 150 கி.மீ., வேகத்தில் புயல் காற்று வீசி வருகிறது. சுமார் 3 லட்சம் பேர் தாழ்வான பகுதிகள் மற்றும் புயலால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…