JoomlaLock.com All4Share.net

Background Video

கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதத்தை 8.65% ஆக எஸ்.பி.ஐ., வங்கி குறைத்துள்ளது. இதுகுறித்து பாரத ஸ்டேட் வங்கி (எஸ்.பி.ஐ.,) வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது: வாடிக்கையாளர்களுக்கு புத்தாண்டு பரிசாக கடன்களுக்கான அடிப்படை வட்டி விகிதம் 8.95 சதவீதத்திலிருந்து 8.65 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் சொந்த வீடு எனும் கனவை பலர் நிறைவேற்றுவார்கள். எஸ்.பி.ஐ., வாடிக்கையாளர்களும் அதிகரிப்பார்கள். இதே போல் நிரந்தர முதன்மை கடன் விகிதம் 13.70 சதவீதத்திலிருந்து 13.40 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது.

80 லட்சம் வாடிக்கையாளர்கள் பயனடையும் இந்த வட்டி குறைப்பு இன்று (ஜன.,1) முதல் அமலாகிறது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…