சனிக்கிழமை, 06 ஜனவரி 2018 00:00
காஷ்மீர் பனிச்சரிவில் சிக்கி 11 பேர் பலி
காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்ட பனிச்சரிவில் சிக்கி 11 பேர் பலியாகியுள்ளனர்.
காஷ்மீர் மாநிலம் குப்வாரா மாவட்டத்தில் தாங்தர் பகுதி சதனா உச்சி பகுதியில் பனிச்சரிவு ஏற்பட்டது. அப்பொழுது அந்த வழியாக சென்று கொண்டிருந்த கார் பனிச்சரிவில் சிக்கியதில் 1 வயது குழந்தை உட்பட 11 பேர் பலியாகியுள்ளனர். 2 பேர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
உடனடியாக ராணுவம், மாநில பேரிடர் மேலாண்மை குழு, போலீஸ் ஆகியோர் மீட்பு பணியில், ஈடுபட்டுள்ளனர். அப்பகுதியில் பனி பூஜியத்திற்கும் குறைவாக இருப்பதாக மீட்பு பணியில் தொய்வு ஏற்பட்டுள்ளது.
Published in
இந்தியா