JoomlaLock.com All4Share.net

Background Video

மேற்கு வங்க மாநிலம், கோல்கட்டாவில் உள்ள ஆச்சார்யா ஜெகதீஷ் சந்திரபோஸ் தாவரவியல் பூங்காவுக்கு செல்வோர், ஆச்சரியத்துடனேயே திரும்புவது வழக்கம்.

அங்கு அமைந்துள்ள பிரமாண்ட ஆல மரம் தான், இதற்கு காரணம். பிரமாண்டம் என்றால், சாதாரண பிரமாண்டம் அல்ல; இரண்டு ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது, இந்த ஆல மரம்.

இந்த மரத்தை, துாரத்தில் இருந்து பார்த்தால், ஆயிரக்கணக்கான விழுதுகள், கிளைகளுடன், ஒரு சிறிய காடு போலவே தோன்றும். போதிய ஆவணங்கள் இல்லாததால், இந்த ஆல மரத்தின் துல்லியமான வயதை கண்டுபிடிக்க முடியவில்லை.

ஆனாலும், 250 ஆண்டுகள் பழமையானதாக இருக்கலாம் என, மதிப்பிட்டுள்ளனர் தாவரவியல் பூங்கா நிர்வாகத்தினர். இதுவரை, இந்த பகுதியில் வீசிய இரண்டு புயல்களுக்கு தாக்குப்பிடித்து நிற்கும் இந்த பிரமாண்ட ஆல மரம், ஒரு ஆச்சரிய அதிசயம் தான்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…