JoomlaLock.com All4Share.net

Background Video

இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி தொடர்ந்து 7 வது ஆண்டாக முதலிடத்தில் இருந்து வருகிறார். 2017 ம் ஆண்டில் அம்பானியின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ரூ.300 கோடி அதிகரித்துள்ளது. தற்போது அவரின் சொத்து மதிப்பு ரூ.3.7 லட்சம் கோடி ஆகும்.

பர்கிளஸ் ஹூரன் என்ற அமைப்பு இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் முகேஷ் அம்பானி முதலிடத்திலும், அவரைத் தொடர்ந்து ஹிந்துஜா குடும்பத்தினர், மிட்டல் குடும்பத்தினர் உள்ளனர். டாப் 10 பட்டியலில் கவுதம் அதானி 8 வது இடத்தில் உள்ளார். 

2018 ம் ஆண்டில் ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்துள்ள இந்தியர்களின் எண்ணிக்கை 831 ஆக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 214 பேர் இந்த பட்டியலில் புதிதாக இணைந்துள்ளனர். அதே சமயம் கடந்த ஆண்டின் டாப் 10 பட்டியலில் இருந்து எச்சிஎல் கம்யூட்டர்ஸ் சிவ் நாடார், பதஞ்சலியின் ஆச்சார்யா பாலகிருஷ்ணா ஆகியோர் பின்தங்கி உள்ளனர். 

ரூ.1000 கோடிக்கு மேல் சொத்து வைத்திருப்போர்களின் மொத்த சொத்த மதிப்பு ரூ.49 லட்சம் கோடியாகும். இது முதலாம் காலாண்டில் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியை (ஜிடிபி) விட அதிகமாகும்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…