JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 04 அக்டோபர் 2018 00:00

டெல்லியில் ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின்

டெல்லியில் நடைபெறும்   இந்தியா -ரஷ்யா 19-வது உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக  ரஷிய அதிபர் விளாதிமிர் புதின், இரு நாள் பயணமாக டெல்லி வந்தடைந்தார்.  அவரை வெளியுறத்துறை மந்திரி சுஷ்மா சுவராஜ், அதிகாரிகள் டெல்லி விமான நிலையத்தில் நேரில் வரவேற்றனர். 
 
அவரது இந்த பயணத்தில் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் ஆகியோரை சந்திக்க உள்ளார்.
 
பிரதமர் மோடி- புதின் சந்திப்பு இன்று (4ம் தேதி) இரவு நடக்க உள்ளதாகவும், நாளை (அக்.5) இருவரும் கூட்டறிக்கை வெளியிடுவர் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
 
புதினின் இந்தப் பயணத்தின்போது ரஷியாவிடம் இருந்து எஸ்-400 விமான எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்கும் ஒப்பந்தம் கையெழுத்தாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு ரூ.36,792 கோடியாகும். இந்த ஏவுகணை வாங்கப்பட்டால், சீன எல்லையில் இந்தியாவின் பாதுகாப்பு ஏற்பாடுகள் பல மடங்கு வலுவடையும். ஏனெனில், இது ரஷியாவின் அதிநவீன ஏவுகணையாகும். இதனை வாங்க சீனா கடந்த 2014-ஆம் ஆண்டே ரஷியாவுடன் ஒப்பந்தம் மேற்கொண்டுவிட்டது.
 
ரஷ்யாவுடன் இந்தியா மேற்கொள்ளும் இந்த ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதால், இந்தியாவை அமெரிக்கா மறைமுகமாக எச்சரித்துள்ளது.
Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…