JoomlaLock.com All4Share.net

Background Video

புதன்கிழமை, 26 செப்டம்பர் 2018 00:00

இனி நேரடி ஒளிபரப்பில் கோர்ட் விசாரணை

நாடு முழுவதிலும் உள்ள கோர்ட்டுகளில் நடக்கும் முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய சுப்ரீம் கோர்ட் அனுமதி அளித்துள்ளது. 

முக்கிய வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்வதற்கு அனுமதிக்கக்கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான சுப்ரீம் கோர்ட் அமர்வு விசாரித்து, இன்று தீர்ப்பு வழங்கி உள்ளது. 
தீர்ப்பில், வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்ய போதிய விதிமுறைகளை மத்திய அரசு வகுக்க வேண்டும்.

நீதித்துறையின் பொறுப்புணர்வை அதிகரிக்க வழக்கு விசாரணையை நேரடி ஒளிரப்பு செய்வது உதவும். சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி தலைமையில் நடக்கும் தேசிய முக்கியத்துவம் வாய்ந்த வழக்குகளின் விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யலாம்.

முதல் கட்டமாக சுப்ரீம் கோர்ட்டில் நடக்கும் வழக்கு விசாரணைகளை நேரடி ஒளிபரப்பு செய்து கொள்ளலாம். போதிய விதிமுறைகளை வகுத்த பிறகு நாட்டின் மற்ற கோர்டுகளில் நடக்கும் வழக்கு விசாரணையை நேரடி ஒளிபரப்பு செய்யலாம் என குறிப்பிடப்பட்டுள்ளது.

 

 

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…