JoomlaLock.com All4Share.net

Background Video

பஞ்சாப் நேஷனல் வங்கியில் மற்றொரு நிறு வனம் 3800 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.பொதுத்துறை வங்கிகளில் ஒன்றான பஞ்சாப் நேஷனல் வங்கியின் மும்பை கிளையில் வைர வியாபாரி நிரவ் மோடியும் அவரது உறவினர் மெஹுல் சோக்சியும் 13 ஆயிரத்து 500 கோடி ரூபாய்க்கு மேல் மோசடி செய்து வெளிநாட்டுக்கு தப்பினர். நாடு கடத்தும் முயற்சி: இதில் நிரவ் மோடி ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். மெஹுல் சோக்சி கரீபியன் நாடான ஆண்டி குவாவில் பதுங்கியுள்ளார். இவர்களை நாடு கடத்தும் முயற்சி நடந்து வருகிறது. இந்நிலையில் மற்றொரு நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியில் 3800 கோடி ரூபாய் மோசடி செய்துள்ளது தெரிய வந்துள்ளது.பி.பி.எஸ்.எல். எனப்படும் பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் என்ற நிறுவனம் பஞ்சாப் நேஷனல் வங்கியின் சண்டிகர் கிளையில் 3200 கோடி ரூபாயும் துபாய் கிளையில் 345 கோடி ரூபாயும் ஹாங்காங் கிளையில் 268 கோடி ரூபாயும் கடன் வாங்கி மோசடி செய்துள்ளது. மொத்தம் 3800 கோடி ரூபாய் அளவிற்கு பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனம் மோசடி செய்திருப்பதாக ரிசர்வ் வங்கியிடம் பஞ்சாப் நேஷனல் வங்கி அறிக்கை அளித்திருக்கிறது. அதில் 'நிறுவன மேம்பாட்டிற்கு எனக்கூறி வங்கியிலிருந்து பெற்ற நிதியை பி.பி.எஸ்.எல்.

முறைகேடாக பயன்படுத்தியுள்ளது. வழக்கு பதிவு: 'எங்களிடம் மட்டுமின்றி மற்ற வங்கி கூட்ட மைப்புகளிடமிருந்து நிதி திரட்டுவதற்காக எங்கள் வங்கியை பயன்படுத்தி மோசடி செய்துள்ளது' என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையை அடிப்படையாக கொண்டு தாமாக முன்வந்து பூஷன் பவர் மற்றும் ஸ்டீல் நிறுவனத்தின் மீதும் அதன் இயக்குனர்கள் ஆடிட்டர்கள் மீதும் சி.பி.ஐ. வழக்கு பதிவு செய்துள்ளது. மேலும் இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசின் நிதி மோசடி தடுப்புக் குழுக்களில் ஒன்றான எஸ்.எப்.ஐ.ஓ. எனப்படும் தீவிர முறைகேடு விசாரணை அலுவலகமும் நடவடிக்கையை துவக்கியுள்ளது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…