JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 05 ஜூலை 2019 00:00

மத்திய பட்ஜெட்டும் புறநானூறும்

பட்ஜெட்டை தாக்கல் செய்த, மத்திய நிதியமைச்சர், நிர்மலா சீதாராமன், தமிழின் மிகப்பழமையான இலக்கியமான, புறநானுாற்றில் இருந்து மேற்கோள் காட்டி, அதன் அர்த்தத்தை விளக்கிய போது, பிரதமர் நரேந்திர மோடி உட்பட சபையினர், மேஜைகளை தட்டி ஆரவாரம் செய்தனர். அறிவுரை: ஒரு அரசன், வரியை எவ்வாறு திரட்ட வேண்டுமென்பது குறித்து, தமிழின் தொன்மையான, புறநானுாறு இலக்கியத்தில், சிறப்பாக விளக்கப்பட்டு உள்ளது. அதில், மதுரையை ஆண்ட பாண்டிய மன்னன், அறிவுடை நம்பி, குடிமக்களை துன்புறுத்தி, வரியை வசூலித்தான். பாதிக்கப்பட்ட மக்கள், புலவர் பிசிராந்தையாரிடம் சென்று, துன்புறுத்தி வரி வசூலிக்கக் கூடாது என, அரசனுக்கு அறிவுரை வழங்குமாறு கேட்டுக் கொண்டனர்.இதையடுத்து, அரசனிடம் சென்ற பிசிராந்தையார், நாட்டு மக்களிடம், எவ்வாறு வரி வசூலிக்க வேண்டுமென அறிவுரை வழங்கியதாக, அந்த புறநானுாற்றுப் பாடல் கூறுகிறது. அப்பாடலைத்தான், தனது பட்ஜெட் உரையின்போது, அமைச்சர் நிர்மலா சீதாராமன் குறிப்பிட்டார்.'யானை புகுந்த நிலம் என்று தலைப்பின் கீழ் பிசிராந்தையார்' என, நிர்மலா சொல்ல முயற்சித்தார். அப்போது, பிசிராந்தையார் என்ற பெயரை உச்சரிக்க, அவர் சற்றே தடுமாறவே, எதிர்க்கட்சி வரிசையில் அமர்ந்திருந்த தமிழக, எம்.பி.,யான ராஜா, 'பிசிராந்தையார்' என, எடுத்துக் கொடுத்தார். விளக்கம்: உடனே, நிர்மலா சிரித்தபடி, பிசிராந்தையார் என தெளிவாக மூன்று முறை உச்சரித்துவிட்டு,காய்நெல் அறுத்துக் கவளங் கொளினேஅறிவுரை வேந்தன் நெறியறிந்து கொளினேபரிவுதப எடுக்கும் பிண்டம் நச்சுயானை புக்க புலம் போலதானும் உண்ணான் உலகமும் கெடுமே...என, முடித்தார். இதை கேட்டவுடன், மற்றவர்கள் அமைதி காக்க, தமிழக, எம்.பி.,க்கள் மட்டும் பலமாக சிரித்தனர்.

அதைக் கேட்டு, தானும் சிரித்த நிர்மலா, பாடலுக்கான விளக்கத்தையும் கூறினார்.அவர் கூறியதாவது: சிறிய பரப்பில் விளைவிக்கப்பட்ட நெல்லை, அரிசியாக்கி சமைத்த உணவே, யானையின் பசியை தீர்த்துவிடும். அதற்கு பதிலாக, யானையே விளை நிலத்திற்குள் புகுந்து சாப்பிடு மேயானால், அதன் காலடிகள் பட்டு அழியும் நெல்லின் அளவு, அது உணவாக உட்கொள்ளும் நெல்லின் அளவை விட அதிகமாக இருக்கும். அதாவது, முறையறிந்த வரி திரட்டினால், நாடு வளம் பெறும். முறையற்ற வகையில், வரி திரட்டினால், யானை புகுந்த நிலம் போல, தனக்கும் பயனில்லாமல், நாட்டுக்கும் பயனில்லாமல் போய்விடும்.

இவ்வாறு, அவர் ஆங்கிலத்தில் விளக்கினார். ரசித்தார்: இதை கேட்டவுடன், பிரதமர் மோடி, மேஜையை பலமாக தட்டுவதை கண்ட நிர்மலா, அதை வெகுவாக ரசித்தார். உள்துறை அமைச்சர் அமித் ஷா உட்பட, அமைச்சர்கள் மற்றும் எம்.பி.,க்களும் ஆரவாரம் செய்தனர். தொடர்ந்து பேசிய நிர்மலா, ''பாண்டிய மன்னன் அறிவுடை நம்பிக்கு வழங்கப்பட்ட அறிவுரையையே, இந்த அரசும் தனக்கான அறிவுரையாக எடுத்துக் கொண்டு, அதற்கேற்ப நடக்கும்,'' என்றார்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…