JoomlaLock.com All4Share.net

Background Video

வெள்ளிக்கிழமை, 05 ஜூலை 2019 00:00

மத்திய பட்ஜெட்: வரி சலுகை விபரங்கள்

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன், வரி செலுத்தும் பொறுப்புள்ள குடிமக்களுக்கு நன்றி தெரிவித்து வரிச்சலுகைகள் மற்றும் புதிய வரி அறிவிப்புக்களை வெளியிட்டார். தமிழில் புறநானூற்று பாடலை மேற்கோள் காட்டி வரி அறிவிப்புக்களை வெளியிட்டார்.

* நேரடி வரி வருவாய் 11.37 லட்சம் கோடியாக அதிகரித்துள்ளது.

* வளர்ச்சியை முன்னோக்கி எடுத்து செல்லும் வகையில் வரி விகிதங்கள் அறிவிக்கப்படும்.

* எலக்ட்ரிக் வாகனங்களுக்கு ஜிஎஸ்டி 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதத்தின் கீழ் கொண்டு வரப்படும்.

* ரூ.400 கோடி வரை ஆண்டு வருவாய் உள்ள நிறுவனங்களுக்கு 25 சதவீதம் வரி. தற்போது ரூ.250 கோடி வரை ஆண்டு வருவாய் கொண்டவர்களுக்கு 25 சதவீதம் வரி விதிக்கப்பட்டு வருகிறது.

* சோலார், கம்யூட்டர் உற்பத்தி செய்யப்படும் நிறுவனங்கள் மறைமுக வரியின் கீழ் கொண்டு வரப்படும்.

* மின்சார வாகனங்கள் வாங்கினால் வருமான வரியில் விலக்கு பெறலாம்.

* மின்சார வாகன கடனுக்கு ரூ.1.5 லட்சம் வரை வருமான வரி விலக்கு

* மின்சார வாகன உற்பத்தி தொழில் துவங்குவோருக்கு வரிச்சலுகை

* ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் இனி வருமான வரி விசாரணைக்கு உட்படுத்தப்பட மாட்டார்கள்.

* வீட்டு கடனுக்கான வரி விலக்கில் கூடுதலாக ரூ.1.5 லட்சம் கோரலாம்.

* வருமான வரித்தாக்கலுக்கு பான் கார்டுக்கு பதில் ஆதார் கார்டு பயன்படுத்தலாம்.

* குறைந்த பட்ஜெட் வீடு வாங்குபவர்களுக்கு மேலும் ரூ.1.5 லட்சம் வரிச்சலுகை

* சர்வதேச நிதிச்சேவை நிறுவனங்களுக்கு 100 சதவீதம் வரிச்சலுகை

* ஆண்டுக்கு ரூ.1 கோடிக்கு மேல் வங்கியில் இருந்து ரொக்கமாக பணம் எடுத்தால் 2 சதவீதம் வரி விதிக்கப்படும்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…