JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 17 ஜூலை 2018 00:00

மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவக்கம்

 'பார்லி.,யில் மழைக்கால கூட்டத்தொடர் சுமுகமாக நடக்க அனைத்துக் கட்சிகளும் ஒத்துழைக்க வேண்டும்' என, பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டுள்ளார்.பார்லி., மழைக்கால கூட்டத்தொடர் இன்று துவங்குகிறது.

இதை முன்னிட்டு, அனைத்துக் கட்சி கூட்டம், நேற்று நடந்தது. இதைஅடுத்து நிருபர்களிடம் பேசிய, பார்லி., விவகாரத்துறை அமைச்சர் அனந்தகுமார் கூறியதாவது: இரு அவைகளிலும் கூட்டத் தொடர் சுமுகமாக நடக்க, அனைத்துக் கட்சியினரும் ஒத்துழைக்க வேண்டும். மக்கள் எதிர்பார்க்கும் திட்டங்கள் குறித்து பேச வேண்டும். பார்லி., கூட்டத்தொடரை மக்கள் கண்காணித்துக் கொண்டிருக்கின்றனர். எனவே, பார்லி., கூட்டத்தொடரை, மக்களுக்கு பயனுள்ளதாக நடத்த ஒத்துழைக்க வேண்டும் என, பிரதமர் மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார்.இவ்வாறு அவர் கூறினார்.

பார்லி., மழைக்கால கூட்டத் தொடரின்போது, உயர் கல்வியில், எஸ்.சி., - எஸ்.டி., பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்கக் கோரும் விவகாரத்தை எழுப்ப, சமாஜ்வாதி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் திட்டமிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…