JoomlaLock.com All4Share.net

Background Video

புனே நகரங்களுக்கு இடையே இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் அதிவேக போக்குவரத்து தடம் அமைக்கப்பட உள்ளது. இதற்கான ஒப்பந்தமும் செய்யப்பட்டு இருக்கிறது.

மணிக்கு 1,200 கிமீ வேகத்தில் செல்லும் வல்லமை வாய்ந்த ஹைப்பர்லூப் போக்குவரத்து திட்டத்திற்கான யோசனை சில ஆண்டுகளுக்கு முன் வெளியிடப்பட்டது.

இந்த புதிய போக்குவரத்து சாதனத்தை நடைமுறை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகள் தீவிரமாக நடந்து வருகின்றன. உலகின் பல்வேறு நாடுகள் இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் குறித்து ஆராய்ந்து வருகின்றன. இந்த நிலையில், இந்தியாவின் முதல் ஹைப்பர்லூப் தடத்தை அமைப்பதற்கான முயற்சியில் மஹாராஷ்டிர அரசு ஈடுபட்டு இருக்கிறது.

Image result for hyperloop highways images photos

மஹாராஷ்டிர மாநிலத்தின் இரு முக்கிய நகரங்களாக விளங்கும் மும்பையிலிருந்து புனே நகரை இணைக்கும் விதத்தில், ஹைப்பர்லூப் போக்குவரத்து தடத்தை அமைப்பதற்காக விர்ஜின் குழுமத்துடன் மஹாராஷ்டிர அரசு ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த திட்டத்தின் சாதக, பாதகங்கள் மற்றும் சுற்றுச்சூழலுக்கான பாதகங்கள் குறித்து மிக தீவிரமான ஆய்வுகள் செய்த பின்னர், அடுத்த 6 மாதங்களில் ஹைப்பர்லூப் திட்டத்தை செயல்படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று மஹாராஷ்டிர அரசு தெரிவித்துள்ளது.

ஹைப்பர்லூப் சாதனங்கள் மின்சார ஆற்றலில் இயங்கும் என்பதால் சுற்றுச்சூழலுக்கு தொந்தரவு இருக்காது. அதிகபட்சமாக மணிக்கு 1,000 கிமீ வேகத்தில் இயக்கும் கட்டமைப்புடன் இந்த போக்குவரத்து சேவை துவங்கப்படும் என்று விர்ஜின் நிறுவனம் தெரிவித்துள்ளது.

நவி மும்பையில் உள்ள சர்வதேச விமான நிலையத்திலிருந்து புனே நகரில் உள்ள மெட்ரோபாலிஸ் வரையில் ஹைப்பர்லூப் தடம் அமைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

தற்போது மும்பை- புனே நகரங்களுக்கு இடையே சாலை மார்க்கமாகவும், ரயில் மார்க்கமாகவும் அடைவதற்கு கிட்டத்தட்ட 3 மணிநேரம் பிடிக்கிறது. ஹைப்பர்லூப் சாதனத்தில் வெறும் 20 நிமிடங்களில் இரு நகரங்களையும் இணைக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.


Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…