JoomlaLock.com All4Share.net

Background Video

புத்த மதத்தினர் அதிகம் வசிக்கும் லடாக்கை காஷ்மீரில் இருந்து பிரித்து தனி யூனியன் பிரதேசம் ஆக்கும் இந்தியாவின் நடவடிக்கைக்கு இலங்கை புத்த மத தலைவர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.

இலங்கையை சேர்ந்த புத்த மத தலைவர்களான மகாநாயகே தெரஸ் மற்றும் சியம் நிகாயா வெளியிட்டுள்ள செய்தியில், இந்திய அரசின் வரலாற்று சிறப்புமிக்க நடவடிக்கையால் எதிர்காலத்தில் இந்தியா-இலங்கை இடையேயான மத, அரசியல், கலாச்சார உறவுகள் பலப்படும். இரு நாடுகளையும் இரு உச்சத்திற்கு எடுத்துச் செல்லும்.

70 சதவீதம் புத்த மத மக்கள் வசிக்கம் லடாக் பகுதியை தனி யூனியன் பிரதேசமாக பிரிக்கும் இந்தியாவின் முடிவு வணங்குவதற்கு உரியது.இந்தியாவின் இந்த முடிவு புத்த மத நாடான இலங்கைக்கு பெருமை சேர்ப்பதாகவும், மகிழ்ச்சி அளிப்பதாகவும் உள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

 

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…