JoomlaLock.com All4Share.net

Background Video

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் உடல் தனி விமானம் மூலம் துபாயில் இருந்து மும்பைக்கு கொண்டு வரப்பட்டது. நாளை இறுதிச்சடங்குகள் செய்யப்பட்டு உடல் தகனம் செய்யப்பட உள்ளது.

துபாயில் கடந்த வாரம் நடைபெற்ற ஒரு திருமண விழாவுக்கு கணவர் போனி கபூர், மகள் குஷி ஆகியோருடன் ஸ்ரீதேவி சென்றிருந்தார். அங்குள்ள நட்சத்திர ஹோட்டலில் தங்கியிருந்த போது சனிக்கிழமையன்று அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு மரணம் அடைந்தார் என தகவல் வெளியானது.

நடிகை ஸ்ரீதேவி மாரடைப்பு ஏற்பட்டு தவறுதலாக பாத் டப்பில் விழுந்து மரணமடைந்தார் என்றும், அவரது ரத்த மாதிரியில் ஆல்கஹால் இருந்ததும் தடவியல் சோதனையில் தெரிய வந்துள்ளதாக கலீச் டைம்ஸ் இணையதளம் செய்தி வெளியிட்டது.

இதையடுத்து, அவரது உடல் இந்தியா கொண்டுவரப்படுவதில் தாமதம் ஏற்பட்டது. அதன் பிறகு தொடர்ந்து ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் உள்பட அவர் தங்கியிருந்த ஹோட்டல் ஊழியர்களிடம் துபாய் போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

இதனால் அவரது உடலை மும்பை கொண்டு செல்வதில் தாமதமானது. துபாய் போலீஸிடம் இருந்து இந்த வழக்கு பொது வழக்கறிஞருக்கு மாற்றப்பட்டது. இன்று மீண்டும் விசாரணை நடைபெற்றது. போனி கபூரின் வாக்குமூலம், தடயவியல் பரிசோதனை அறிக்கையை வழக்கறிஞர் ஏற்றுக்கொண்டார். 

இதையடுத்து ஸ்ரீதேவியின் மரணத்தில் எந்தவித குற்றவியல் நோக்கமும் இல்லை என்று போலீசார் தகவல் வெளியிட்டனர். இந்த நிலையில், இந்திய தூதரகத்தின் முறையான ஆவணங்களைத் தொடர்ந்து ஸ்ரீதேவியின் உடலை அவரது உறவினர்களிடம் ஒப்படைக்க துபாய் காவல்துறை அனுமதியளித்துள்ளது.

இதனையடுத்து ஸ்ரீதேவி மரணம் தொடர்பாக துபாய் போலீஸார் விசாரணை முடிவுக்கு வந்தது. ஸ்ரீதேவி உடல் ஒப்படைப்பு ஸ்ரீதேவியின் உடலை ஒப்படைக்கும் அனுமதி சான்றிதழை அவரது குடும்பத்தாரிடம் துபாய் காவல்துறையினர் கொடுத்தனர். அனுமதி சான்றிதழ் கிடைத்த நிலையில் ஸ்ரீதேவியின் உடல் பதப்படுத்த எடுத்துச் சென்றனர். இந்த நடைமுறை முடிந்தவுடன் போனிகபூரிடம் உடல் ஒப்படைக்கப்பட்டது. ஸ்ரீதேவியின் பாஸ்போர்ட் ரத்து செய்யப்பட்டது.

ஸ்ரீதேவியின் உடலை கொண்டு வருவதற்காக கடந்த 4 நாட்களாக துபாய் விமான நிலையத்தில் 13 பேர் பயணிக்க கூடிய அனில் அம்பானியின் விமானம் தயார் நிலையில் இருந்தது. அனைத்து பிரச்சினைகளும் ஒருவழியாக முடிவுக்கு வந்ததை அடுத்து எம்பாமிங் செய்யப்பட்ட ஸ்ரீதேவியின் உடல் விமானத்தில் ஏற்பட்டது. தனி விமானம் துபாயிலிருந்து ஸ்ரீதேவி உடலுடன் மும்பைக்கு வந்தது.


Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…