JoomlaLock.com All4Share.net

Background Video

வியாழக்கிழமை, 11 ஜூலை 2019 00:00

'நியூஸ்பிரின்ட்' மீது சுங்க வரி

 ''நியூஸ்பிரின்ட் எனப்படும், செய்தித்தாள் அச்சிட பயன்படும் தாள் மீது, மத்திய அரசு புதிதாக விதித்துள்ள, 10 சதவீத சுங்க வரியை உடனடியாக விலக்க வேண்டும்,'' என, ராஜ்யசபா, எம்.பி., வீரேந்திர குமார் வலியுறுத்தினார்.

மத்திய பட்ஜெட் தொடர்பாக, ராஜ்யசபாவில் இன்று(ஜூலை 11) நடந்த விவாதத்தில், வீரேந்திரகுமார், எம்.பி., பேசியதாவது: கடந்த, 2009ம் ஆண்டிலிருந்து, நியூஸ் பிரின்ட் மீது, சுங்க வரி விதிக்கப்படாத நிலையில், இந்த பட்ஜெட்டில், 10 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இது, ஏற்கனவே, நிதி நெருக்கடியில் சிக்கித் தவிக்கும், செய்தித்தாள் வெளியிடும் நிறுவனங்களுக்கு, பலத்த சிக்கலை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் உற்பத்தியாகும் நியூஸ்பிரின்ட், உள்நாட்டு தேவைக்கு போதுமானதாக இல்லை. மேலும், இந்திய தயாரிப்பு நியூஸ் பிரின்ட்டை, அதிவேக அச்சிடும் இயந்திரங்களில் பயன்படுத்த முடிவதில்லை. எனவே, வெளிநாடுகளில் இருந்து தான், இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது.நியூஸ்பிரின்ட் தயாரிப்பிற்காக, மரங்கள் வெட்டப்படுவதால், சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு ஏற்படுகிறது எனவும், தெரிவிக்கப்படுகிறது. இதனால், சீனாவில், பல நியூஸ்பிரின்ட் தயாரிப்பு ஆலைகள், மூடப்பட்டுவிட்டன.

இந்நிலையில், இறக்குமதியாகும் நியூஸ்பிரின்ட் மீது, சுங்க வரி விதித்திருப்பது, செய்தித்தாள் வெளியிடும் நிறுவனங்களுக்கு, மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, அறிவிக்கப்பட்டுள்ள வரி விதிப்பை, மத்திய அரசு, உடனடியாக வாபஸ் பெற வேண்டும். இவ்வாறு, வீரேந்திர குமார் எம்.பி., பேசினார்.

 

 

 

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…