JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 09 ஜூலை 2019 00:00

19 மாநிலங்களில் சி.பி.ஐ., 'ரெய்டு'

ஊழல் மற்றும் ஆயுத கடத்தல் தொடர்பாக, நாடு முழுவதும், 19 மாநிலங்களில், 110 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள், நேற்று அதிரடி சோதனை நடத்தினர்.வங்கி மோசடி தொடர்பாக, 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள, 50 இடங்களில், கடந்த, 2ல், சி.பி.ஐ., அதிகாரிகள் சோதனை நடத்தினர்.

இதன் தொடர்ச்சியாக, மும்பை, டில்லி, பஞ்சாப், ஹரியானா, உத்தர பிரதேசம் உட்பட, 19 மாநிலங்களில், 110 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்றுசோதனையிட்டனர்.பல்வேறு நிறுவனங்கள், இயக்குனர்கள், வங்கி அதிகாரிகள், தனி நபர்கள் உட்பட பலர் மீது, 30 புதிய வழக்குகள், பதிவு செய்யப்பட்டு உள்ளன.உ.பி.,யில், பகுஜன் சமாஜ் தலைவர், மாயாவதி ஆட்சியின் போது, சர்க்கரை ஆலைகளை தனியார் மயமாக்கிய விவகாரத்தில் நடந்த ஊழல் தொடர்பாக, உ.பி., மற்றும் டில்லியில், 11 இடங்களில், சி.பி.ஐ., அதிகாரிகள் நேற்று சோதனை நடத்தினர்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…