JoomlaLock.com All4Share.net

Background Video

செவ்வாய்க்கிழமை, 05 டிசம்பர் 2017 00:00

2 ஜி ஊழல்வழக்கு : இறுதி தீர்ப்பு தேதி அறிவிப்பு

2ஜி ஸ்பெக்ட்ரம் முறைகேடு வழக்கில் டிசம்பர் 21ம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என டில்லி சி.பி.ஐ., சிறப்பு கோர்ட் நீதிபதி சைனி அறிவித்துள்ளார்.

காங்கிரஸ் தலைமையிலான முந்தைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின் போது நடந்த, ‛2ஜி' ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டில் முறைகேடு நடந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. இந்த வழக்கு, டில்லி சி.பி.ஐ., சிறப்புகோர்ட்டில் நடந்து வந்தது. கடந்த ஏப்ரல் 26ம் தேதி வழக்கில் அனைத்து வாதங்களும் முடிவடைந்த நிலையில் தேதி குறிப்பிடாமல் தீர்ப்பு தேதி ஒத்திவைக்கப்பட்டது. தீர்ப்பு எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நீதிபதி சைனி, தீர்ப்புதேதி இன்று(டிச.,5) வெளியிடப்படும் என அறிவித்திருந்தார்.

இந்நிலையில், 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு வழக்கில் தீர்ப்பு வரும் டிச.,21ல் காலை 10.30 மணியளவில் வழங்கப்படும் எனவும், தீர்ப்பு எழுதும் பணி முடிவடைந்துவிட்டதாகவும் நீதிபதி சைனி அறிவித்துள்ளார். இதற்காக, ராஜா, கனிமொழி உள்ளிட்ட குற்றம்சாட்டபட்டவர்கள் கோர்ட்டில் ஆஜரானார்கள்.

பின்னர் கனிமொழியிடம், தீர்ப்பு எப்படியிருக்கும் என நிருபர்கள் கேட்டதற்கு, தீர்ப்பு வெளி வரட்டும் பார்க்கலாம் எனக்கூறி விட்டு சென்றார்.
ராஜா கூறியதாவது: சட்டத்தை மதிக்கும் குடிமகனான எனக்கு நீதித்துறை மீது நம்பிக்கை உள்ளது. தீர்ப்பு எப்படி இருக்கும் என சொல்வதற்கு நான் நீதிபதி இல்லை என பதிலளித்தார்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…