JoomlaLock.com All4Share.net

Background Video

2019-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்புக்கு மோடி அழைப்பு விடுத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

2019-ம் ஆண்டு ஜனவரி மாதம் 26-ம் தேதி இந்திய குடியரசு தினம் கொண்டாடப்பட உள்ளது.. இதையொட்டி விழாவில் பங்கேற்குமாறு அமெரிக்க அதிபர் டெனால்டு டிரம்ப்பிற்கு பிரதமர் மோடி அழை்பபு விடுத்துள்ளார்.

பிரதமர் அமெரிக்காவுடனான நல்லுறவை மேம்படுத்தி வருகிறார். முன்னதாக, கடந்த 2015-ம் ஆண்டு குடியரசு தினவிழாவில் அப்போதைய அமெரிக்க அதிபர் ஒபாமாவை சிறப்பு விருந்தினராக அழைத்து கவுரவித்தார்.

அதேபோல், 2019-ம் ஆண்டு குடியரசு தின விழாவில் தற்போதைய அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ள வேண்டும் என அழைப்பு விடுத்துள்ளார். மோடியின் 5 ஆண்டுகால ஆட்சி முடிவு பெற்று, தேர்தல் வரும் சூழலில் அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

மோடியின் அழைப்பு தொடர்பாக வெள்ளை மாளிகை தரப்பில் இருந்து இதுவரை எவ்வித முடிவும் எடுக்கப்படவில்லை.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…