JoomlaLock.com All4Share.net

Background Video

நம் நாட்டில் கிடைக்கும், 'ஆன்டிபயாடிக்' எனப்படும், கிருமி எதிர்ப்பு மாத்திரைகளில், 64 சதவீதம், உரிய அனுமதி இன்றி விற்கப்படுவதாக, அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

சி.டி.எஸ்.சி.ஓ., எனப்படும், மத்திய மருந்து தரக்கட்டுப்பாட்டு அமைப்பின் அனுமதியின்றி மருந்துகள் விற்பது சட்டவிரோதமாக இருப்பினும், போலி மாத்திரைகள் விற்கப்படுவது தொடர்கதையாகி வருகிறது.

ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான, பிரிட்டன் தலைநகர் லண்டனில் உள்ள, குயீன் மேரி பல்கலையை சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள், 2007 - 2012 காலத்தில், இந்திய சந்தையில் விற்கப்பட்ட மருந்து பொருட்கள் குறித்த ஆய்வை மேற்கொண்டனர்.

இந்த ஆய்வில் வெளியான முடிவுகள் விபரம்:இந்தியாவில் விற்கப்படும் அனைத்து மருந்துப் பொருட்களுக்கும், சி.டி.எஸ்.சி.ஓ.,வின் அனுமதியை பெற வேண்டும். அவ்வாறு அனுமதி பெறாமல் மருந்துகளை விற்றால், அது சட்டவிரோதமாக கருதப்பட்டு, கடும் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

இந்தியாவில், 2007 - 12ம் ஆண்டுகளில் விற்கப்பட்ட ஆன்டிபயாடிக் மாத்திரைகள், எப்.டி.சி., எனப்படும், நிலையான மருந்து பொருட்களின் கூட்டு கலவை ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டது. மொத்தம், 118 வகை மருந்துகளை ஆய்வு செய்ததில், அவற்றில், 64 சதவீதம், .டி.எஸ்.சி.ஓ.,வின் அனுமதியை பெறவில்லை என்பது தெரியவந்தது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…