JoomlaLock.com All4Share.net

Background Video

டெல்லி மாநகராட்சி அதிகாரி கொலை வழக்கில் டெல்லி துணை நிலை ஆளுநரை கைது செய்ய வேண்டும் என ஆம் ஆத்மி கூறியிருப்பதுடன் அவருக்கு சம்மன் அனுப்பவும் முடிவு செய்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. டெல்லி மாநகராட்சியில் அதிகாரியாக பணியாற்றி வந்த எம்.எம்.கான் கடந்த மே மாதம் 16ம் தேதி அவரது வீட்டின் முன் அடையாளம் தெரியாத மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். இது தொடர்பாக ஓட்டல் உரிமையாளர் ஒருவரை போலீசார் கைது செய்தனர். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய டெல்லி துணை முதலமைச்சர் மனிஷ் சிசோடியா எம்.எம்.கான் கொலையில் டெல்லி துணைநிலை ஆளுநர் நஜீப் ஜங், பாஜக எம்.பி மகேஷ் கிரி, அக்கட்சியின் முன்னாள் எம்.பி கன்வார் சிங் ஆகியோருக்கு தொடர்பு இருப்பதாக கூறினார். இந்த கொலையில் முக்கிய குற்றவாளி துணைநிலை ஆளுநர் தான் என்றும் அவர் குற்றம் சாட்டினார். எம்.எம் கான் கொலையில் பாரதிய ஜனதாவினருக்கு தொடர்பு இருப்பதாக காங்கிரஸ் மூத்த தலைவர் பி.சி சாக்கோ குற்றம் சாட்டியுள்ளார். அதே நேரத்தில் துணைநிலை ஆளுநர் மீதுள்ள குற்றச்சாட்டும் முறையற்றது என்றும் அவர் கூறினார்.

Published in இந்தியா

அமெரிக்கா நாடாளுமன்ற கூட்டத்தில் பிரதமர் மோடியின் பேச்சு பெரும் வரவேற்பை பெற்றது. மோடியின் பேச்சிற்கு அமெரிக்க எம்.பி.,க்கள் 64 முறை கைதட்டினர். இது தொடர்பாக கருத்து தெரிவித்த ஆம்ஆத்மி, மோடிக்கு கிடைத்த கைதட்டல்களும், பாராட்டுக்களும் வெறும் நாடகம். ஏற்கனவே எழுதி வைத்து செய்யப்பட்ட ஒன்று என தெரிவித்துள்ளது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…