ஜெயலலிதா மரணம் மோடிக்கு தொடர்பு! அச்சத்தில் பா.ஜ.க. எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன்...
தினகரன் ஆதரவு எம்எல்ஏ தங்க தமிழ்ச்செல்வன் கூறியதாவது:
ஓபிஎஸ் அணியினருக்கு என்ன டிமாண்ட் என்பது பற்றி எனக்கு தெரியாது. ஆனால் எங்களுக்கு தேவை ஜெயலலிதா ஆட்சி. எல்லா சட்டமன்ற உறுப்பினர்களும் அதைத்தான் விரும்புகிறோம். துணைப் பொதுச் செயலாளர் தினகரன் கட்சியும் ஆட்சியும் நன்றாக இருக்க வேண்டும் என்று விரும்பி விலகிவிட்டார்.
சத்தியமாக ஜெயலலிதா மீது ஆணையிட்டு சொல்கிறேன் ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை வேண்டும். 60 நாட்கள் முதல்வராக இருந்த ஓபிஎஸ் விசாரிக்கப்பட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் வந்து சிகிச்சை அளித்தார்கள். அவர்கள் விசாரிக்கப்பட வேண்டும்.
எய்ம்ஸ் மத்திய அரசின் மருத்துவமனையும் கூட. மத்திய அரசையும் விசாரணைக்கு கூப்பிடுவீர்களா? ஓபிஎஸ்ஸை விசாரணைக்க கூப்பிட வேண்டும். லண்டன் டாக்டரை விசாரணைக்கு கூப்பிட வேண்டும். எய்ம்ஸ் மருத்துவர்களை விசாரணைக்கு கூப்பிட வேண்டும். சிங்கப்பூர் டாக்டரை விசாரணைக்கு கூப்பிட வேண்டும். மோடியை விசாரணைக்கு கூப்பிடுங்கள்.
ஜெயலலிதா மரணம் குறித்து ஒரு முடிவு தெரிந்தாக வேண்டும். மர்மம் மர்மம் என்று எத்தனை நாட்களுக்கு சொல்வீர்கள். 60 நாட்கள் முதல்வராக இருக்கும் போது மர்மம் தெரியவில்லை. இப்போது மட்டும் மர்மம் தெரிகிறதா? இது நியாயம் இல்லை என்று தங்க தமிழ்ச் செல்வன் கூறினார்.
அணி மாறுவேன்: சசி ஆதரவு எம்எல்ஏ எச்சரிக்கை
கல்குவாரியை மூடாவிட்டால், அணி மாறுவேன் என சூலூர் தொகுதி சசி ஆதரவு எம்.எல்.ஏ., கனகராஜ் கூறியுள்ளார்.கோவையில் உள்ள பெரிய குயிலி கல்குவாரி 2 பேர் பலியானார்கள். இது தொடர்பாக விபத்து என போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ., கனகராஜ், இந்த கல்குவாரியில் 300 அடி ஆழத்திற்கு பள்ளம் தோண்டப் பட்டுள்ளது. கல்குவாரியை மூட நடவடிக்கை எடுக்காவிட்டால், அணிமாறுவேன். மக்கள் பணியாற்றும் அணியில் இணைவேன். இந்த கல்குவாரியில் ரூ.50 கோடிக்கும் மேல் ஊழல் நடந்துள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.
"ஆர்.கே.நகர் தேர்தலுக்கு பின் திமுக எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வந்துவிடுவார்கள் " டி.டி.வி.தினகரன் ஆருடம்
ஆர்கே நகர் இடைத் தேர்தலுக்கு பின்னர், திமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் எங்கள் பக்கம் வருவார்கள் என அதிமுக துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன், திடுக்கிடும் தகவலை கூறினார்.
திருவொற்றியூர் பகுதியில் அதிமுக சசிகலா அணியினரின் பொதுக் கூட்டம் நடந்தது. இதில், அக்கட்சியின் துணை பொது செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது, அவர் பேசியதாவது:-
ஆர்.கே. நகர் தொகுதிக்கான இடைத் தேர்தல் தேதியை, தேர்தல் கமிஷன் அறிவித்துவிட்டது. இதையடுத்து நமது அணியினர், தீவிரமாக செயல்பட்டு, வெற்றிக்காக பாடுபட வேண்டும். ஆர்.கே. நகர் தேர்தலுக்கு பின்னர், ஓ.பன்னீர்செல்வம் இருக்கும் இடம் தெரியாமல் போய்விடுவார்.
அவர், மாயமாக மறையவும் அதிகளவில் வாய்ப்பு உள்ளது. அவர், அரசியலுக்கு வந்ததுக்கு பதில், சினிமாவுக்கு சென்று இருக்கலாம். நல்ல சிறந்த நடிகராக இருக்கிறார்.
அதேபோல், இடைத் தேர்தல் முடிந்ததும், திமுகவில் இருந்து 15 எம்எல்ஏக்கள் நமது பக்கம் வருகிறார்கள். எனது முன்னிலையில், அதிமுகவில் இணையும் நிகழ்ச்சி விரைவில் நடைபெறும்.
இவ்வாறு அவர் கூறினார்.
மத்திய அமைச்சரவையிலிருந்து 5 பேர் நீக்கம்
மத்திய அமைச்சரவையில் 19 பேரை புதிதாக சேர்க்கப்பட்டதை தொடர்ந்து 5 இணையமைச்சர்கள் மத்திய அமைச்சரவையிலிருந்து நீக்கப்பட்டுள்ளனர். பிரதமர் மோடியின் பரிந்துரையை தொடர்ந்து இவர்கள் நீக்கப்பட்டுள்ளனர்.01. பஞ்சாயத்து துறை இணையமைச்சராக இருந்த நிகல்சந்த் மேகாவால். இவர் ராஜஸ்தான் மாநிலம் காங்காநகர் தொகுதியிலிருந்து தேர்வானவர். இவர் மீது கற்பழிப்பு புகார் உள்ளது.02. மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை இணையமைச்சராக இருந்த ராம் சங்கர் கதாரியா. இவர் உ.பி., மாநிலம் ஆக்ரா தொகுதியிலிருந்து தேர்வானவர்.03. மத்திய நீர்வளத்துறை இணையமைச்சர் சன்வர்லால் ஜாட், இவர் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் தொகுதியில் தேர்வு செய்யப்பட்டவர்.04. மத்திய பழங்குடியினர் நலத்துறை இணையமைச்சராக இருந்த மனுசுக்பாய் டி வாசவா. இவர் குஜராத் மாநிலம் நர்மதா தொகுதியிலிருந்து தேர்வானவர்05. விவசாயத்துறை இணையமைச்சர் எம்.கே.குந்தாரியா. இவர் குஜராத் மாநிலம் ராஜ்கோட் தொகுதியிலிருந்து தேர்வானவர்.
எம்.எல்.ஏ.,வாக பதவியேற்றார் நான்சி
நியமன எம்.எல்.ஏ.,வாக நியமிக்கப்பட்டநான்சி சிந்தியா பிரான்சிஸ் இன்று பதவியேற்றுக்கொண்டார். தனது அறையில், நான்சிக்கு சபாநாயகர் தனபால் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.