JoomlaLock.com All4Share.net

Background Video

ஆர்கே நகர் இடைத்தேர்தல் தேதியை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றதாக டில்லி கோர்ட்டில் போலீசார் குற்றம்சாட்டியுள்ளனர்.சுகேஷ் தாக்கல் செய்த ஜாமின் மனு மீதான விசாரணையின் போது, போலீசார் கோர்ட்டில் கூறியதாவது:

ஆர்கே நகர் இடைத்தேர்தலை நிர்ணயிக்க தினகரன் லஞ்சம் கொடுக்க முயன்றார். தனக்கு ராசியான எண் 5. ரத்தான தேர்தலை மே 5ம் தேதி நடத்த ஏற்பாடு செய்ய வேண்டும் என சுகேசிடம் தினகரன் கூறியுள்ளார். இந்த வழக்கில் மேலும் 5 பேர் கைது செய்யப்பட வேண்டியுள்ளது இவ்வாறு அவர் கூறியுள்ளனர்.இந்நிலையில் சுகேசுக்கு ஜாமின் வழங்க போலீசார் எதிர்ப்பு தெரிவித்தனர்.

Published in அரசியல்

சென்னை:

கோர்ட் அவமதிப்பு குற்றத்துக்காக கோல்கட்டா ஐகோர்ட் நீதிபதி சி.எஸ்.கர்ண னுக்கு ஆறு மாதம் சிறை தண்டனை விதித்து சுப்ரீம் கோர்ட் தீர்ப்பளித்தது.

இதனையடுத்து சென்னைக்கு கர்ணனை கைது செய்ய வந்த கோல்கட்டா போலீசார் தமிழக போலீசாருடன் ஆலோசனை நடத்தினர் தொடர்ந்து அவர்

ஆந்திராவின் தடா மாவட்டத்தில் இருப்பது மொபைல் போன் மூலம் தெரியவந்தது இதனையடுத்து அவரை கைது செய்ய கோல்கட்டா போலீசார் ஆந்திரா கிளம்பி சென்றனர்.

Published in தமிழகம்

நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா போலீஸ் காளஹஸ்தி செல்கிறது. கர்ணனுக்கு 6 மாதம் சிறை தண்டனை விதித்து உச்சநீதிமன்றம்

நேற்று தீர்ப்பளித்தது. உச்சநீதிமன்ற தீர்ப்பை அடுத்து நீதிபதி கர்ணனை கைது

செய்ய கொல்கத்தா போலீசார் சென்னை வந்தனர். ஆனால் சாமி தரிசனம் செய்வதாற்காக காளஹஸ்தி கோயிலுக்கு நீதிபதி கர்ணன் சென்றுள்ளார்...

இதையடுத்து 5 பேர் கொண்ட கொல்கத்தா போலீசார் நீதிபதி கர்ணனை கைது செய்ய காளஹஸ்தி செல்கின்றனர்.

Published in தமிழகம்
ஞாயிற்றுக்கிழமை, 30 ஏப்ரல் 2017 00:00

100 கிலோ கஞ்சா பறிமுதல்! போலீசார் விசாரணை...

செங்குன்றம் பகுதியில் கேட்பாரற்று நின்ற காரில் இருந்து 100 கிலோ கஞ்சாவினை போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.

மேலும் இந்த கடத்தலில் ஈடுபட்டவர்களை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Published in தமிழகம்

கடந்த 25-ம் தேதி உறையாரில் ரவுடி ரவிசங்கர் கொலை செய்யப்பட்டார். ரவுடி ரவிசங்கர் கொலை வழக்கில் 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

முன்விரோதம் காரணமாக ரவிசங்கரை கொலை செய்ததாக விசாரணையில் ராஜசேகர் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் பாகூரில் பதுங்கி இருந்த ராஜசேகர், விக்கி, ஐயப்பன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Published in தமிழகம்
பக்கம் 1 / 6
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…