JoomlaLock.com All4Share.net

Background Video

சீனாவின் உள்நாட்டு தயாரிப்பான முதல் ஜெட் விமானம் 70 பயணிகளுடன் இன்று சேவையை தொடங்கியது. தடம் எண்: EU6679 கொண்ட இந்த புதிய விமானம் இன்று சீனாவின் செங்டு நகரில் இருந்து ஷங்காய் நகருக்கு தனது முதல் பயணத்தை வெற்றிகரமாக நிறைவு செய்தது.

சீனாவில் உள்ள பயணிகள் விமானங்கள் அனைத்தும் வெளிநாடுகளில் இருந்து வாங்கப்பட்டுவரும் நிலையில் உள்நாட்டிலேயே ஜெட் ரக பயணிகள் விமானத்தை தயாரிக்கும் முயற்சியில் சீன அரசுக்கு சொந்தமான நிறுவனம் பல ஆண்டுகளாக ஈடுபட்டு வந்தது.

இதன்விளைவாக, ARJ-21 ரக ஜெட் விமானம் சமீபத்தில் தயாரிக்கப்பட்டது. 70 பயணிகளுடன் செங்டு நகரில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 2 மணி நேரம் 12 நிமிடங்களில் ஷங்காய் நகருக்கு சென்றடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்தன.

Published in உலகம்
வியாழக்கிழமை, 23 ஜூன் 2016 00:00

அருண் ஜெட்லி :சீனா பயணம்

ஆசிய உள்கட்டமைப்பு முதலீட்டு வங்கியின் முதல் மாநாடு, இந்தியா- சீனா இடையேயான நிதி ஆலோசனை கூட்டத்தில் பங்கேற்பதற்காக 5 நாள் பயணமாக மத்திய நிதியமைச்சர் அருண் ஜெட்லி சீனா சென்றுள்ளார்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…