JoomlaLock.com All4Share.net

Background Video

காஞ்சிபுரம் வேகவதி ஆற்றின் குட்டையில் மூழ்கி 2 சிறுவர்கள் பரிதாபமாக பலியாகியுள்ளனர்.

குட்டை நீரில் மூழ்கி சிறுவர்கள் தாமு, சிவா ஆகியோரே உயிரிழந்துள்ளனர்.

Published in தமிழகம்

சசிகலா விரும்பினால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும்' என்று அ.தி.மு.க அம்மா கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் தெரிவித்தார்.

அ.தி.மு.க அம்மா கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலாவின் அண்ணன் வினோதகனின் மகன் மகாதேவன் இன்று காலை அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் உடனடியாக தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனைக்குக் கொண்டுசெல்லப்பட்டார். செல்லும் வழியில் அவர் உயிரிழந்தார். அவரது உடல் தஞ்சாவூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் மகாதேவனின் தாய்மாமன் டி.டி.வி.தினகரன்  தஞ்சாவூர் விரைந்துள்ளார். மருத்துவமனையில் உள்ள மகாதேவன் உடலுக்கு அவர் அஞ்சலிசெலுத்த உள்ளார்.

இதனிடையே செய்தியாளர்களிடம் பேசிய டி.டி.வி.தினகரனிடம் மகாதேவன் இறுதிச்சடங்கில் பங்கேற்க சசிகலா வருவாரா என்று கேட்டனர். அதற்குப் பதில் அளித்த அவர்  சசிகலா விரும்பினால் அவர் பரோலில் வருவதற்கான ஏற்பாடு செய்யப்படும். மகாதேவன் மரணம் குறித்து சிறையில் உள்ள சசிகலாவுக்கு தெரிவிக்கப்பட்டுள்ளது என்று கூறினார்.

 

Published in அரசியல்

ஆந்திராவில் வெயில் கொடுமைக்கு ஒரே வாரத்தில் 17 பேர் பலியாகி உள்ளனர். உடல்நல பாதிப்பு ஏற்பட்டு சுமார் 200க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். சுட்டெரிக்கும் வெயில் : கோடை வெயிலின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இந்நிலையில், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டத்தில் வெயிலின் தாக்கம் 100 டிகிரியைத் தாண்டி கொளுத்துகிறது. இதனால் முதியவர்கள், நோயாளிகள் உள்பட பல்வேறு தரப்பினர் வெப்பத்தை தாங்க முடியாமல் கடும் அவதியுற்று வருகின்றனர்.இந்நிலையில், திருப்பதி அருகே உள்ள வரதய்யபாளையம், ஸ்ரீகாளஹஸ்தி உள்பட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த 17 பேர் ஒரே வாரத்தில் வெயிலின் கொடுமைக்கு பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதனிடையே, வெயில் தாக்கத்தால் பல்வேறு பாதிப்புகளுக்கு உள்ளான 200-க்கும் மேற்பட்டோர் ஸ்ரீகாளஹஸ்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.இப்போதே வெயிலின் தாக்கம் தாங்க முடியாமல் பலரும் உயிரிழந்து வரும் நிலையில், ஏப்ரல் இறுதி மற்றும் மே மாதத்தில் பல இடங்களில் வெப்பத்தின் அளவு 115 டிகிரியை தாண்டும் என வானிலை மையம் ஏற்கனவே எச்சரித்துள்ளது. இதனால் மக்கள் உயிர் பயத்தில் ஆழ்ந்துள்ளனர்.

Published in இந்தியா

உத்தர்காண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர், பிதோகார்க் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Published in இந்தியா

சவுதி அரேபியாவில் இருக்கும் அமெரிக்க தூதரகம் மீது நடத்தப்பட்ட வெடிகுண்டு தாக்குதலை அங்குள்ள பாதுகாப்பு அதிகாரிகள் முறியடித்துள்ளனர்.

சவுதி அரேபியாவின் ஜெத்தா பகுதியில் அமைந்துள்ளது அமெரிக்க தூதரகம். இங்கு தாக்குதல் நடத்தும் பொருட்டு வெடிகுண்டுடன் வந்த தற்கொலை தீவிரவாதியை அங்கு பாதுகாப்பில் இருந்த அதிகாரிகள் இனம் கண்டு முறியடித்துள்ளனர்.

தீவிரவாதியை பாதுகாப்பு அதிகாரிகள் தடுத்து நிறுத்தியதும் எடுத்து வந்த வெடிகுண்டை வெடிக்க செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதில் அந்த தீவிரவாதி உடல் சிதறி கொல்லப்பட்டுள்ளார். தாக்குதலை தடுக்க முயன்ற பாதுகாப்பு அதிகாரிகள் இருவருக்கு பலத்த காயம் ஏற்படுள்ளத்காக கூறப்படுகிறது.

அமெரிக்க நாடு தனது சுதந்திர தினத்தை கொண்டாட இருக்கும் இந்த வேளையில் அந்த நாட்டின் தூதரகம் மீது நடத்தப்பட்ட தீவிரவாத தாக்குதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 
Published in உலகம்
பக்கம் 1 / 4
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…