JoomlaLock.com All4Share.net

Background Video

டெல்லியில் ஆசாட்பூர் மண்டி என்ற இடத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. சம்பவ இடத்திற்கு 3 தீயணைப்பு வண்டிகளில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்........

இந்த சம்பவத்தில் பல பொருட்கள் எரிந்து சாம்பலாகின. ..

Published in தமிழகம்

தமிழகத்தில் பாஜகவுக்கு சாதகமான நிலை உருவாகி இருக்கிறது. தமிழகத்தில் நல்ல ஆளுமை வருவதை திமுக விரும்பாது. ஒரு கட்சியை அழிக்கும் முயற்சியில் திமுக இறங்கி இருக்கிறது.

 

எம்ஜிஆர் ஆட்சி காலத்திலேயே அதிமுகவை அழிக்க நினைத்தார்கள் அது முடிய வில்லை. பத்திரிகையாளர்களின் உரிமைகள் மீது அழுத்தம் கொடுப்பது ஜனநாயகத்தை அழிக்கும் நிலைதான்.

தமிழகத்தில் திமுக ஆட்சிக்கு வர வாய்ப்பே இல்லை. இது பாஜகவின் காலம். உள்ளாட்சி தேர்தலில் பாஜக தனித்து போட்டியிடும் இரண்டு கட்சிகளும் இல்லாமல் போய் விட்டது. டெல்லியில் நடைபெற்ற விவசாயிகள் போராட்டம் அரசியல் தந்திரம்.

 

2014-ஆம் ஆண்டுக்கு பிறகு நடைபெற்ற தேர்தல்களில் பா.ஜ.க. தொடர்ந்து வெற்றி பெற்று வருகிறது. தமிழகத்தில் பாஜக ஆள வேண்டும் என மக்கள் நினைக்கின்றனர். தமிழக பெண்கள் குறித்த கேரள அமைச்சர் மணியின் பேச்சு கண்டிக்கத்தக்கது. சிவகங்கை மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சி பணியில் இருந்த அதிகாரி திறமையானவர் என்பதால் மக்கள் அவரை விரும்புகின்றனர்.

Published in அரசியல்

தோல்விக்கு பொறுப்பேற்று  சில எம்.எல்.ஏ. க்கள் பதவி விலக முன்வந்துள்ளனர். மேலும் பஞ்சாப் மாநில பொறுப்பாளராக இருந்த சஞ்சய் தனது பதவியை துறக்க முடிவு செய்துள்ளார்.

இதனையடுத்து கட்சிக்கு ஏற்பட்ட நிலை குறித்து விவாதிக்க எம்.எல்.ஏ. க்கள் கூட்டத்திற்கு கெஜ்ரிவால் அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அடுத்து எடுக்க வேண்டிய நிலை குறித்து கெஜ்ரிவால் விவாதிக்கிறார்.

Published in இந்தியா

கடந்த 25-ம் தேதி உறையாரில் ரவுடி ரவிசங்கர் கொலை செய்யப்பட்டார். ரவுடி ரவிசங்கர் கொலை வழக்கில் 10 பேரை கைது செய்து போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.

முன்விரோதம் காரணமாக ரவிசங்கரை கொலை செய்ததாக விசாரணையில் ராஜசேகர் என்பவர் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த வழக்கில் பாகூரில் பதுங்கி இருந்த ராஜசேகர், விக்கி, ஐயப்பன் உள்ளிட்ட 10 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

Published in தமிழகம்

இந்தி திணிப்பை தடுக்க விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என திராவிடர் கழக தலைவர் கீ.வீரமணி தெரிவித்துள்ளார்.

இந்தி திணிப்பிற்கு தமிழகத்தில் கடும் எதிர்ப்பு வந்தவுடன் மத்திய அரசு பதுங்கிறது என்றும் வீரமணி கூறியுள்ளார். இதனால் இந்தி பேசுவது பரிந்துரையே  கட்டாயம் அல்ல எனவும் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

மத்திய அரசின் இந்த விளக்கம் பதுங்குவதை போன்றது அதனால் தொடர்ந்து விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் என வீரமணி தெரிவித்துள்ளார். 

Published in இந்தியா
பக்கம் 1 / 10
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…