JoomlaLock.com All4Share.net

Background Video

டாஸ்மாக் கடை திறப்பதற்கு எதிராக திருப்பூர் மாவட்டம் சாமளாபுரத்தில் நடந்த போராட்டத்தின் போது பெண்ணை கன்னத்தில் பலமாக அறைந்த ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது. அவர் மீது சென்னை ஐகோர்ட்டில் வழக்கும் தொடரப்பட்டுள்ளது.

டாஸ்மாக் கடைகளை திறப்பதற்கு எதிராக திருப்பூர், சாமளாபுரத்தில் நேற்று போராட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்ட பெண்கள் மீது போலீசார் தடியடி நடத்தினர். ஏடிஎஸ்பி பாண்டியராஜன், பெண் ஒருவரை கன்னத்தில் பலமாக அறைந்தார். இதில் காயமடைந்த அப்பெண் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது அவர் கேட்கும் திறனை இழந்து விட்டதாக கூறப்பட்டது

கைது செய்யப்பட்ட 27 பேரை விடுவிக்க வலியுறுத்தியும், ஏடிஎஸ்பி பாண்டியராஜனை பதவிநீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் சாமளாபுரம் மக்கள் இன்று காலை முதல் உண்ணாவிரத போராட்டம் துவக்கி உள்ளனர். இதனால் ஏற்பட்ட பதற்றம் காரணமாக அப்பகுதியில் அதிக அளவில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையில் பெண்ணை கடுமையாக தாக்கிய ஏடிஎஸ்பி பாண்டியராஜனுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கை அவசர வழக்காக ஏற்று, விசாரிக்கும்படி கேட்டுக் கொள்ளப்பட்டது.

இந்த கோரிக்கையை ஏற்ற ஐகோர்ட், இன்று பகல் 2.30 மணிக்கு இவ்வழக்கை விசாரணைக்கு ஏற்பதாக தெரிவித்துள்ளது.

Published in தமிழகம்

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் கள்ளப்பா என்ற டி.எஸ்.பி. வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ரவுடிகள் துணையுடன் குழந்தைகளை கடத்தி டி.எஸ்.பி. பணம் சம்பாதித்து வந்துள்ளார். குழந்தை கடத்தலில் ஈடுபட்டது 2 நாள் முன் வெளிச்சத்துக்கு வந்ததால் தற்கொலை என தகவல் தெரிவிக்கின்றன.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…