JoomlaLock.com All4Share.net

Background Video

ஞாயிற்றுக்கிழமை, 19 மார்ச் 2017 00:00

பெரு நாட்டில் மழை, வெள்ளம்! பலி 72

பெரு நாட்டில் பெய்த கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 72 ஆக உயர்ந்துள்ளது.தென் அமெரிக்க நாடுகளில் ஒன்றான, பெரு நாட்டின் லிமா பகுதியில் கடந்த 2 நாட்களாக பெரும் மழை பெய்து வருகிறது. இதனால் நிலச்சரிவும், வெள்ளப்பெருக்கும் ஏற்பட்டுள்ளது. போக்குவரத்து முழுவதும் துண்டிக்கப்பட்டு உள்ளது. பல இடங்களில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டு உள்ளது. உணவு, உடையின்றி பொதுமக்கள் பலர் தவித்து வருகின்றனர். வசிப்பிடங்களிலும் வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால், மக்களுக்கு பெரும் அவதி ஏற்பட்டுள்ளது. எல் - நினோ விளைவின் காரணமாகவே, கனமழை, வெள்ளம் ஏற்பட்டுள்ளதாக, அந்நாட்டு ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Published in உலகம்

உத்தர்காண்ட் மாநிலத்தில் மேகவெடிப்பு காரணமாக பலர் உயிரிழந்துள்ளனர். பலியானவர்களில் பெரும்பாலானோர், பிதோகார்க் பகுதியை சேர்ந்தவர்கள் என தெரியவந்துள்ளது. இதனால் அங்கு பாதிக்கப்பட்ட பகுதிகளில் மாநில பேரிடர் மீட்புப் படையினர், தேசிய பேரிடர் மீட்புப் படையினர் மற்றும் இந்தோ-திபெத்திய எல்லை போலீஸ் படையினர் ஆகியோர் மீட்பு பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Published in இந்தியா

அடுத்த 24 மணி நேரத்தில் உத்திரகாண்டில் கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது.உத்திரகாண்டில் கடந்த இரண்டு நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில் தற்போது கனமழை பெய்யும் என வானிலை மையம் எச்சரித்துள்ளது. அடுத்த 2 நாட்களுக்கு இந்த கனமழை தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் மாவட்ட நிர்வாகமும், அதிகாரிகளும் உஷார்படுத்தப்பட்டுள்ளனர். வங்க கடலுக்கும் பஞ்சாப்பிற்கும் இடையே ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக மேற்கு பகுதி மாநிலங்களில் அடுத்த 24 மணிநேரத்திற்கு கனமழை பெய்யும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. நைனிடால், உத்திரகாசி, திக்ரி, சாம்பவாத் உள்ளிட்ட பகுதிகளில் மிக அதிக அளவு மழை பெய்ய வாய்ப்பு இருப்பதாக கூறப்பட்டுள்ளது.

Published in இந்தியா

ஃபிரான்ஸ் தலைநகரில் வெள்ளப்பெருக்கால் ஏற்பட்ட ஆபத்து தணிந்துள்ளதால் நதிக்கு அருகிலுள்ள கிராண்ட் பேலஸ் அருங்காட்சியகம் திறக்கப்பட்டுள்ளது.

வெள்ளம் பெருகி ஓடிய செயின் நதிக்கு எதிரில் இருக்கின்ற லூவ்ர் மற்றும் ஆர்சே அருங்காட்சியகங்கள் மூன்றாவது நாளாக மூடப்பட்டுள்ளன.

இந்த இரண்டு அருங்காட்சியகங்களிலும் தரைதளத்திலுள்ள ஓவியப்படைப்புகள் சேதமடையாமல் தடுக்க அவற்றை மேல் தளங்களுக்கு மாற்றியுள்ளனர்.

பாரிஸில் சில மெட்ரோ ரெயில் சேவைகள் இயங்கவில்லை. படகு போக்குவரத்து மற்றும் சில ரெயில் சேவைகள் இடைநிறுத்தப்பட்டுள்ளன.

காப்பீடு தொழில்துறை இழப்பீட்டு தொகை வழங்க வகை செய்யும் வகையில் இந்த வாரத்தில் அமைச்சரவை கூடி, ஓர் இயற்கை பேரழிவு என்ற முறையாக பிரகடனம் செய்யும் என்று பிரான்ஸ் அதிபர் பிரான்சுவா ஒலாந்த் தெரிவித்திருக்கிறார்.

Published in உலகம்
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…