JoomlaLock.com All4Share.net

Background Video

கர்நாடகா மாநிலம் சிக்மகளூரில் கள்ளப்பா என்ற டி.எஸ்.பி. வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்டார். ரவுடிகள் துணையுடன் குழந்தைகளை கடத்தி டி.எஸ்.பி. பணம் சம்பாதித்து வந்துள்ளார். குழந்தை கடத்தலில் ஈடுபட்டது 2 நாள் முன் வெளிச்சத்துக்கு வந்ததால் தற்கொலை என தகவல் தெரிவிக்கின்றன.

Published in இந்தியா
வெள்ளிக்கிழமை, 17 ஜூன் 2016 00:00

மழைகாக நிர்வாணமாக நடக்கவிட்ட மக்கள்

கர்நாடகாவில் மழை வேண்டி சிறுவனை நிர்வாணமாக ஊருக்குள் நடக்கவிட்ட சம்பவம் அரங்கேறியுள்ளது. நிர்வாணமாக நிறுத்தப்பட்ட சிறுவன் மீது முதலில் நீர் தெளிக்கப்பட்டு சில பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து தலையில் சாமி சிலை வைக்கப்பட்டு ஊர்வலமாக அழைத்து செல்லப்பட்டார். இந்த சம்பவத்தின் போது பெண்களும் கூட வருகிறார்கள். மேளங்களும் அடிக்கப்பட்டு, பூஜைகள் செய்யப்பட்டன. இந்த காட்சி கர்நாடகாவில் வேகமாக பரவி வருகிறது.

Published in இந்தியா
செவ்வாய்க்கிழமை, 14 ஜூன் 2016 00:00

காரை விற்றது ஏன்? சித்தராமையா விளக்கம்

கர்நாடக முதல்வர் சித்தராமையாவின் காரில் காகம் ஒன்று சுமார் அரை மணி நேரம் அமர்ந்திருந்தது. இதனால் அவருக்கு பிரச்னை ஏற்படும் என ஜோதிடர்கள் கூறினர். இதனையடுத்து அந்த கார் விற்கப்பட்டது. இது தொடர்பாக சித்தராமையா கூறியதாவது: எனக்கு மூட நம்பிக்கையில் எந்த நம்பிக்கையும் இல்லை. அந்த கார் பழதாகிவிட்டதால் தான் விற்பனை செய்ய சொன்னேன். அந்த கார் ஏற்கனவே 2 லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓடியுள்ளது எனக்கூறினார்.

Published in இந்தியா

கர்நாடகா, மத்தியப் பிரதேச மாநிலங்களில் மாநிலங்களவைத் தேர்தல் இன்று காலை தொடங்கியது.

7 மாநிலங்களில் 27 மாநிலங்களவை உறுப்பினர்கள் இன்று தேர்ந்தெடுக்கப்படுகின்றனர். தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் 30 பேர் போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

Published in இந்தியா

ஜெயலலிதா சொத்துக்குவிப்பு மேல்முறையீடு வழக்கில் கர்நாடக அரசு தரப்பில் எழுத்துப்பூர்வ வாதம் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. உச்சநீதிமன்றத்தில் கர்நாடக அரசு தரப்பு இதுவரை செய்த வாதங்கள் சுருக்கமாக தாக்கல் செய்யப்பட்டது. மேலும் வழக்கு பற்றி 6 நிறுவனங்களும் சொத்துக்குவிப்பை மறைப்பதற்காக தொடங்கப்பட்டது என்று கர்நாடக தரப்பில் கூறப்பட்டுள்ளது. நிறுவனங்களுக்கு ஜெயலலிதா, சசிகலா உட்பட 4 பேர் மூலம் முதலீடுகள் கிடைத்தன என்று கர்நாடக தரப்பு வாதத்தில் கூறப்படுகிறது. எதற்காக தொடங்கப்பட்டதோ அதற்கான பணியை நிறுவனங்கள் மேற்கொள்ளவில்லை என்றும் கர்நாடக தரப்பில் கூறப்படுகிறது.

Published in அரசியல்
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…