JoomlaLock.com All4Share.net

Background Video

காஷ்மீர் பள்ளத்தாக்கில் இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளது.

தீவிரவாதிகள் தாக்குதல் மற்றும் ராணுவ வீரர்கள் மீது காஷ்மீர் இளைஞர்கள் தாக்குதல் நடத்தியது போன்ற காரணத்தால் அங்கு இணைய சேவைகள் முடக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

Published in இந்தியா

காஷ்மீரில் 2 பயங்கரவாதிகளை பாதுகாப்பு படையினர் சுட்டுக்கொன்றனர்.போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி பாக்., ராணுவம் எல்லலையில் தொடர்ந்து அத்துமீறி தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் இன்று ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாராவின் காலரூஸ் பகுதியில் பயங்கரவாதிகளுடன் ராணுவத்தினர் துப்பாக்கி சண்டை நடத்தி வருகின்றனர். 2 அல்லது 3 பயங்கரவாதிகள் பதுங்கியிருக்கலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ராணுவத்தினர் சுட்டதில், 2 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர். தொடர்ந்து சண்டை நடந்து வருகிறது.

Published in இந்தியா

ஐம்மு-காஷ்மீர் மாநிலம், ஸ்ரீநகரில் நேற்று பெரிய இப்தார் நிகழ்ச்சி நடைபெற்றது. அதாவது, நோம்பு திறக்கும் நிகழ்ச்சியில் 3000 பேர் கலந்து கொண்டு ஒன்றாக நோம்பு திறந்து சாதனை முறியடித்தனர்.

Published in இந்தியா

காஷ்மீர் மாநிலம் அனந்த்நாக் தொகுதியில் நடைபெற்ற இடைத் தேர்தலில் அம்மாநில முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி பெற்றுள்ளார்.

காங்கிரஸ் வேட்பாளர் ஹிலால் அகமது ஷாவை விட 12 ஆயிரம் வாக்குகள் அதிகம் பெற்று அனந்த்நாக் தொகுதி இடைத் தேர்தலில் முதல்வர் மெகபூபா முஃப்தி வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அனந்த்நாக் தொகுதி உறுப்பினரும், முதல்வருமாக இருந்தவருமான முஃப்தி முகமது சயீத் உடல் நலக் குறைவு காரணமாக மரணமடைந்ததை அடுத்து, அந்த தொகுதியில் இடைத் தேர்தல் நடத்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Published in இந்தியா

ஜம்மு காஷ்மீர் முதல்வர் மெகபூபா முப்தி சட்டசபையில் எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், கடந்த 2015 ஜனவரி 15ம் தேதியிலிருந்து இதுவரை பாகிஸ்தான் அத்துமீறி நடத்திய தாக்குதல் பயங்கரவாத தாக்குதல் போன்ற சம்பவங்களால் 47 பாதுகாப்பு படையினர், 108 பயங்கரவாதிகள் என 190க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். வன்முறை தொடர்பாக 800 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பயங்கரவாதிகள் தாக்குதல் சம்பவம் தொடர்பாக 4 மாஜிஸ்திரேட் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது எனக்கூறியுள்ளார்.

Published in இந்தியா
பக்கம் 1 / 2
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…