JoomlaLock.com All4Share.net

Background Video

இலங்கை சிறையில் உள்ள 29 மீனவர்களை விடுவிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா எழுதி உள்ள கடிதத்தில் வலியுறுத்தி உள்ளார். நீண்ட நாட்களாக இலங்கை வசம் உள்ள 94 மீன்பிடி படகுகளையும் விடுவிக்க நடவடிக்கை தேவை. கடந்த 23ல் வல்வெட்டித்துறையில் சிறைபிடிக்கப்பட்ட 5 நாகை மீனவர்கள் உள்ளிட்ட 29 பேரை விடுவிக்க வேண்டும். விரைவாக நடவடிக்கை மேற்கொள்ள வெளியுறவு அமைச்சகத்திற்கு உத்தரவிட வேண்டும் என முதல்வர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

Published in தமிழகம்
வியாழக்கிழமை, 23 ஜூன் 2016 00:00

பிரதமர் : உஸ்பெகிஸ்தான் பயணம்..

ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டில் பங்கேற்க உஸ்பெகிஸ்தானின் தாஷ்கண்ட் நகருக்கு பிரதமர் மோடி இன்று செல்ல உள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்ட செய்தியில், பொருளாதார ஒத்துழைப்பு குறித்து விவாதிக்க உள்ளதாகவும், மக்களுடன் மக்கள் நேரடி தொடர்பு கொள்வது பற்றி கவனம் செலுத்தப்படும் எனவும் கூறினார்.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…