JoomlaLock.com All4Share.net

Background Video

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலில் இருந்த காலத்தில், டில்லியில், 56 ஆயிரத்து, 665 கோடி ரூபாய் மதிப்புள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நகரத்திலும், டிபாசிட் செய்யப்பட்ட தொகை பட்டியலை மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவு தயாரித்துள்ளது. அப்பட்டியலில்  55 ஆயிரத்து  665 கோடி ரூபாய் டிபாசிட்டுடன் டில்லி முதலிடத்தில் உள்ளது. மும்பையில்  35,272 கோடி ரூபாய்; பெங்களூருவில், 24,835 கோடி ரூபாய் சூரத்தில் 12,593 கோடி ரூபாய்  லக்னோவில்  8,195 கோடி ரூபாய் என டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலில் இருந்த  50 நாட்களில், நாடு முழுவதும்  98 லட்சம் வங்கி கணக்குகளில், 10 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கின்படி, சராசரியாக ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 10 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் 17.92 லட்சம் வங்கி கணக்குகள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Published in இந்தியா

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற இடத்தில் மோட்டார் குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published in இந்தியா

பிரதமர் மோடி ஒவ்வொரு மாதமும் கடைசி ஞாயிற்றுக்கிழமையில் 'மன் கி பாத்' ரேடியோ நிகழ்ச்சி மூலம் மக்களிடம் உரையாடி வருகிறார்.

இந்நிலையில் 32-வது மன் கி பாத் நிகழ்ச்சியில், அவர் இன்று உரையாடினார்.


அதில் அவர்"புனித ரம்ஜான் மாதம் தொடங்கியுள்ளது. இதற்காக, உலகம் முழுவதும் உள்ள இஸ்லாமிய மக்களுக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். இந்திய நாட்டின் மத பன்முகத்தன்மையைக் கண்டு பெருமைப்பட வேண்டும். இங்கு மட்டும்தான் அனைத்து மதங்களைச் சேர்ந்த மக்களும் சுதந்திரமாக இருக்கிறார்கள். நாட்டின் பன்முகத்தன்மைதான் நமக்கு பலம். கடந்த முறை நான் பேசிய போது விடுமுறையில் புதிதாக ஏதாவது செய்து பார்க்கச் சொன்னேன். மக்கள் அவர்களது அனுபவங்களை என்னுடன் பகிர்ந்துள்ளனர். இது மகிழ்ச்சியளிக்கிறது. இன்று வீர சாவர்க்கரின் பிறந்தநாள். தேசத்துக்காக, அவரது பங்களிப்பு விலை மதிப்பற்றது.

சுதந்திர போராட்ட வீரர்களின் தியாகங்கள் குறித்து அறிவதில் இளைஞர்கள் ஆர்வம் காட்டுவது மகிழ்ச்சியளிக்கிறது.

சுதந்திர போராட்ட தியாகிகளின் நடவடிக்கைகளை இளைஞர்கள் பின்பற்ற வேண்டும். வருகின்ற ஜூன் 5-ம் தேதி உலக சுற்றுச்சூழல் தினம் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் மட்டுமல்லாமல் அனைத்து தினங்களிலும், சுற்றுச்சூழல் மீது அக்கறை கொள்ள வேண்டும்.

ஜூன் 21-ம் தேதி உலக யோகா தினம் கடைபிடிக்கப்படுகிறது. இதில் அனைத்து மக்களும் கலந்து கொள்ள வேண்டும். யோகா ஆரோக்கியத்துக்கு மிகவும் நல்லது" என்று கூறினார்.

 

Published in தமிழகம்

இலங்கையில் சுற்றுப்பயணம் மேற்கொண்ட மோடி தன்னுடைய சிறப்புரையில் இலங்கை கிரிக்கெட் வீரர் முத்தையா முரளிதரன் குறித்து பெருமையாகப் பேசினார். இதனை தனக்குக் கிடைத்த பெரும் பரிசாகக் கருதுகிறார் முரளிதரன்.

அதில் மோடி பேசியபோது இலங்கைத் தமிழர் பகுதியில் இருந்து தான் புரட்சித் தலைவர் எம்ஜிஆர்  முன்னணி சுழற்பந்து வீச்சாளர் முத்தையா முரளிதரன் ஆகியோர் தோன்றியுள்ளனர்  எனக் குறிப்பிட்டிருந்தார்.

இதுகுறித்து முத்தையா முரளிதரன் கூறுகையில் இந்தியா போன்ற ஒரு பெரிய நாட்டின் பிரதம மந்திரி என்னைக் குறிப்பிட்டு பேசியதையே பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன்.

என் சமூகத்தின் அடையாளமாக என்னை இந்தியப் பிரதமர் அங்கீகரித்துப் பேசியதைப் பெருமையாகக் கருதுகிறேன்' எனக் கூறினார்.

மேலும் தனக்கும் இந்தியாவுக்குமான உறவு குறித்து பேசிய முரளிதரன் எனக்கும் இந்தியாவுக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு உண்டு. தமிழகத்தில் சென்னையைச் சேர்ந்த பெண்ணை தான் திருமணம் செய்துள்ளேன்.

 

கொழும்புவில் புத்த பூர்ணிமா கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகின்றன. இந்நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காகவும் இந்திய நிதி உதயவியுடன் கட்டப்பட்டுள்ள மருத்துவமனையை திறந்த வைக்கவும்  தமிழர்களை சந்தித்து பேசவும் பிரதமர் நரேந்திர மோடி இரண்டு நாள் பயணமாக இலங்கை சென்றிருந்தார் இலங்கை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கயுடன் கொழும்பு நகரில் உள்ள நூற்றி இருபது ஆண்டு பழமையுள்ள கந்தராமையா கோவிலின் அங்கமாக திகழ்கிற சீமா மலாக்கா புத்த கோவிலுக்கு சென்று சர்வேத புத்த பூர்ணிமா கொண்டாட்டத்தின் வழக்கப்படி அந்த புத்த கோவிலின் கருவறைக்கு சென்று விளக்கு ஏற்றி வழிபட்டார். அதைத்தொடர்ந்து தமிழர்கள் அதிகம் வாழும் கண்டியில் நுவரெலியாவில் பிரதமர் மோடி பங்கேற்று இந்திய பங்களிப்பில் கட்டப்பட்ட மருத்துவமனையை திறந்து வைத்தார். இலங்கை தலைநகரான கொழும்பு  வாரணாசி இடையே நேரடி விமான சேவை தொடங்கப்படும் என்று மோடி அறிவித்துள்ளார். இந்நிலையில் இரண்டு நாள் கொழும்பு பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் நரேந்திர மோடி நேற்றிரவு நாடு திரும்பினார். 

Published in தமிழகம்
பக்கம் 1 / 17
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…