JoomlaLock.com All4Share.net

Background Video

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலில் இருந்த காலத்தில், டில்லியில், 56 ஆயிரத்து, 665 கோடி ரூபாய் மதிப்புள்ள 500, 1,000 ரூபாய் நோட்டுக்கள் வங்கியில் டிபாசிட் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு நகரத்திலும், டிபாசிட் செய்யப்பட்ட தொகை பட்டியலை மத்திய நிதி அமைச்சகத்தின் வருவாய் பிரிவு தயாரித்துள்ளது. அப்பட்டியலில்  55 ஆயிரத்து  665 கோடி ரூபாய் டிபாசிட்டுடன் டில்லி முதலிடத்தில் உள்ளது. மும்பையில்  35,272 கோடி ரூபாய்; பெங்களூருவில், 24,835 கோடி ரூபாய் சூரத்தில் 12,593 கோடி ரூபாய்  லக்னோவில்  8,195 கோடி ரூபாய் என டிபாசிட் செய்யப்பட்டுள்ளது.

ரூபாய் நோட்டு வாபஸ் நடவடிக்கை அமலில் இருந்த  50 நாட்களில், நாடு முழுவதும்  98 லட்சம் வங்கி கணக்குகளில், 10 கோடி ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இந்த கணக்கின்படி, சராசரியாக ஒவ்வொரு வங்கி கணக்கிலும் 10 லட்சம் ரூபாய் டிபாசிட் செய்யப்பட்டுள்ளது. இதில் 17.92 லட்சம் வங்கி கணக்குகள் மீது சந்தேகம் ஏற்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.

Published in இந்தியா

ராஜஸ்தான் மாநிலம் ஜெய்சால்மர் என்ற இடத்தில் மோட்டார் குண்டு வெடித்து 5 ராணுவ வீரர்கள் காயமடைந்தனர்.

காயமடைந்த அனைவரும் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Published in இந்தியா

இந்தியாவின் மனிதவள மேம்பாட்டு அமைச்சராக, எதிர்க்கட்சிகளின் பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு இலக்கான ஸ்மிரிதி இரானி, அந்த இலாகாவில் இருந்து ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். இது, ஆச்சரியமான மாற்றமாக அரசியல் வட்டாரங்களில் பார்க்கப்படுகிறது.

அமைச்சரவை மாற்றத்தை ஒட்டி, பல்வேறு அமைச்சர்களின் இலாகாக்கள் மாற்றப்பட்டுள்ளன.

புதிதாக 19 அமைச்சர்களை இணைத்து, பிரதமர் மோதி மத்திய அமைச்சரவையை மாற்றியமைத்துள்ளார். அமைச்சரவை இவ்வளவு பெரிய அளவில் மாற்றியமைக்கப்படுவது இது இரண்டாவது முறையாகும்.

மனிதவள மேபாட்டுத்துறை அமைச்சர் ஸ்மிரிதி இரானி, அத்துறையிலிருந்து ஜவுளித்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். மனிதவள மேம்பாட்டு அமைச்சராக பிரகாஷ் ஜவடேகர் நியமிக்கப்பட்டுள்ளார். செவ்வாய்க்கிழமை நடந்த அமைச்சரவை விரிவாக்கத்தில் அவர் கேபினட் அமைச்சராகப் பதவி உயர்வு பெற்றார். அவர் இதுவரை சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறையைக் கவனித்து வந்தார். ஸ்மிரிதி இரானி தனது கல்வித்தகுதி தொடர்பாக தனது வேட்பு மனுவில் தவறான தகவல்களைத் தெரிவித்தார் என்று எதிர்க்கட்சிகள் அவர் மீது குற்றம் சுமத்தின. அதுதொடர்பாக, நீதிமன்றத்திலும் வழக்குத் தொடரப்பட்டது. மேலும், ஹைதராபாத் பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலா தொடர்பாக ஸ்மிரிதி தெரிவித்த கருத்துக்களும் சர்ச்சையை ஏற்படுத்தின. இந்த சர்ச்சைகளில், ஸ்மிரிதியை பதவி நீக்கம் செய்யக் கோரி எதிர்க்கட்சிகள் பல நாட்கள் நாடாளுமன்ற நடவடிக்கைகளை முடக்கியது குறிப்பிடத்தக்கது.

அப்போது எதிர்க்கட்சிகளின் கோரிக்கையை நிராகரித்த பிரதமர் மோடி, அமைச்சரவை மாற்றத்தை ஒட்டி ஸ்மிரிதியின் இலாகாவை மாற்றியிருப்பது முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.

நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சராக இருந்த வெங்கைய நாயுடு, தகவல், ஒலிபரப்புத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார். அனந்தகுமார், நாடாளுமன்ற விவகாரங்களைக் கவனிப்பார்.

தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ரவிசங்கர் பிரசாத்துக்கு சட்டம் மற்றும் நீதித்துறை வழங்கப்பட்டுள்ளது. இதுவரை சட்ட அமைச்சராக இருந்த சதானந்த கவுடா, புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்கத்துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதிய இணை அமைச்சர் எம்.ஜே. அக்பருக்கு, வெளியுறவுத்துறை வழங்கப்பட்டுள்ளது.

நிதித்துறை இணை அமைச்சர் ஜெயந்த் சின்ஹா, விமானப் போக்குவரத்துத் துறைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

புதிய ஊரக மேம்பாட்டுத்துறை அமைச்சராக நரேந்திர தோமரும், நிதித்துறை இணை அமைச்சராக அர்ஜுன் மெக்வாலும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் நாடாளுமன்ற விவகார இணை அமைச்சராக எஸ்.எஸ். அலுவாலியா நியமிக்கப்பட்டுள்ளார்.

அனுப்ரியா படேல், சுகாதாரத்துறை இணை அமைச்சராகவும், அஜய் தாமதா ஜவுளித்துறை இணை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

Published in இந்தியா

இந்திய பொருளாதார சீர்திருத்தத்தின் தந்தை முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் என முன்னாள் மத்திய நிதியமைச்சர் ப.சிதம்பரம் கூறியுள்ளார்.இதுதொடர்பாக தனியார் டி.வி., சேனலுக்கு அவர் அளித்த பேட்டி:கடந்த 25 ஆண்டுகளில் இந்திய பொருளாதாராத்தை சீர்திருத்தி வடிவமைத்ததில் காங்கிரஸ் கட்சிக்கு பெரும் பங்கு உண்டு. அந்த வகையில் மறைந்த முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் பொருாளாதார சீர்திருத்தத்தின் தந்தை என கூறலாம். பொருளாதார சீர்திருத்தத்திற்காக கிடைத்த எல்லா வாய்ப்புகளையும் காங். அரசு பயன்படுத்தியது. தற்போதைய மோடி அரசு பொருளாதார சீர்த்திருத்தத்திற்காக துணிச்சலான முடிவுகளை எடுக்க வேண்டும்.இவர் அவர் கூறினார்.

Published in இந்தியா

மத்திய அமைச்சரவை நாளை மாற்றியமைக்கப்படுகிறது. 9 பேர் புதிதாக அமைச்சராகின்றனர். இவர்கள் நாளை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் பதவியேற்கின்றனர். மத்திய அமைச்சரவை மாற்றியமைக்கப்படும் என நீண்ட நாட்களாக எதிர்பார்க்கப்பட்டது. இதற்கு முடிவு கட்டும் விதமாக அமைச்சர்களை அழைத்து அவர்களின் செயல்பாடுகள் பற்றி பிரதமர் நரேந்திர மோடி ஆய்வு நடத்தினார். அதன் முடிவில் அமைச்சரவையில் இலாக்க மாற்றம் செய்வதுடன், காலியாக உள்ள இடங்களை நிரப்பவும் தேர்தலை சந்திக்க உள்ள மாநிலங்களுக்கு புதிதாக அமைச்சர்களை ஒதுக்கவும் நரேந்திர மோடி முடிவுசெய்துள்ளார். புதிய அமைச்சர்களாக நியமிக்கப்பட உள்ளவர்களுக்கு நாளை காலை 11 மணிக்கு குடியரசுத் தலைவர் மாளிகையில் வைத்து ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பதவி பிரமாணம் செய்து வைக்கிறார். இதற்கான அதிகாரப்பூர்வ தகவல் குடியரசுத் தலைவர் மாளிகைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனிடையே அமைச்சரவை மாற்றம் பற்றி சில தகவல்களும் வெளியாகியுள்ளன. உள்துறை, நிதி, பாதுகாப்பு மற்றும் வெளியுறவு உள்ளிட்ட முக்கிய துறைகளில் மாற்றம் இருக்காது என தெரிகிறது. எரிசக்தி துறை அமைச்சர் பியூஷ் கோயலுக்கு கேபினட் அந்தஸ்து கிடைக்க வாய்ப்புள்ளது. அதே போன்று 75 வயதுக்கு மேற்பட்டவர்கள் அமைச்சர்களாக இருக்கக் கூடாது என்றும் பிரதமர் மோடி முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதனால் சிறுபான்மைத் துறை அமைச்சர் நஜ்மா ஹெப்துல்லா, சிறு குறு தொழில்துறை அமைச்சர் கல்ராஜ் மிஸ்ரா ஆகியோரின் பதவி பறிபோவது உறுதியாகி உள்ளது. அடுத்த ஆண்டு சட்டப்பேரவையை சந்திக்க உள்ள உத்திரபிரதேசத்திற்கு தாராளமாக புதிய அமைச்சர் பதவிகள் வழங்கப்படும் எனவும் எதிபார்க்கப்படுகிறது.

Published in இந்தியா
Top
We use cookies to improve our website. By continuing to use this website, you are giving consent to cookies being used. More details…